மது போதையில் வந்த வீரர்கள்.. ஆவணம் இல்லாத காளைகள்! தகுதி நீக்கம் செய்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 40 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், மது அருந்தியதற்காகவும், உடல் தகுதி இல்லாததாலும் 6 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் என்றால் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்கள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி இருக்கிறது.
இதில் 318 மாடுபிடி வீரர்களும் 1004 காளைகளும் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறாறார். ஒவ்வொரு சுற்றும் 45 நிமிடம் நடைபெறும். இந்த போட்டி 8 சுற்றுகள் முதல் 10 சுற்றுகள் வரை போட்டி நடைபெறவுள்ளது.

ஏற்பாட்டாளர்கள்
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வரும் 10 உறுப்பினர்கள் கொண்ட அரசுத் தரப்பை சேர்ந்த 'ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழு மற்றும் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழு இணைந்து நடத்தி வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டு உள்ளன.

பல்வேறு கட்டுப்பாடுகள்
அதேபோல் காளைகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து கலெக்சன் பாயிண்ட் சென்றவுடன் மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு, பரிசோதனை நடைபெற்றது. அத்துடன் ஆன்லைனில் பதிவு செய்த காளை உரிமையாளர்கள் அனுமதி சீட்டு அடிப்படையில் வரிசையாக அனுப்பப்பட்டனர்.

மருத்துவ குழு
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு க்யூ ஆர் கோடு மற்றும் புகைப்படம், ஆதார் எண் அடங்கிய அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டது. காளைகளை பரிசோதனை செய்ய 93 மருத்துவர்கள் அடங்கிய 40 மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர்.
காளைகளின் உயரம் கொம்பு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யும் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு போட்டிகள் தொடங்கி வருகின்றன.

பலத்த பாதுகாப்பு
ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் பகுதியில் இருந்து 50 மீட்டர் தூரம் முழுவதும் தேங்காய் நார் பரப்பபட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மாநகர காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் 1300க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பரிசுகள்
சிறந்த மாடு பிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டிகளில் கலந்துகொண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்கள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், குக்கர் போன்ற பரிசுகளை அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

காளைகள், வீரர்கள் தகுதி நீக்கம்
வாடிவாசலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் காளைகளை அடக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆவணங்கள் இல்லாத காரணத்தால் 40 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், மது அருந்தி வந்ததற்காக 4 வீரர்களும், உடல் தகுதி இல்லாததால் 2 வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications