மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிநீர் தொட்டியில் மலம்.. யாராக இருந்தாலும் தப்ப முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வார்னிங்

Google Oneindia Tamil News

மதுரை: குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் முக்கியமான பிரச்சினை என்றும் குற்றவாளிகள் யாரும் தப்பிக்கவே முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

புதுக்கோட்டை முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயலில் பல தலைமுறைகளாக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசியது.

மேலும் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்த போது மலம் கலக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோரிடம் பட்டியலின மக்கள் புகார் அளித்தனர்.

ஆய்வு

ஆய்வு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் ஆட்சியரும் எஸ்பியும் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது மக்கள் அடுக்கடுக்கான புகார்களை கூறினர். இதை கேட்டு ஆட்சியரும் எஸ்பியும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அங்குள்ள இறையூர் அய்யனார் கோயிலில் தலைமுறை தலைமுறையாக வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

 இரட்டை குவளை முறை

இரட்டை குவளை முறை

மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஊர் மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து டீக்கடைக்காரர் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பட்டியலின மக்களை அய்யனார் கோயிலுக்குள் கவிதா ராமு அழைத்து சென்றார். அப்போது அங்கு கோயில் பூசாரி ராஜனின் மனைவி சிங்கம்மாள் சாமியாடி போல் வந்து பட்டியலின மக்களை மோசமான வார்த்தைகளால் விமர்சித்து அவர்களை கோயிலுக்குள் அழைத்து செல்லக் கூடாது என்றார்.

பெண் கைது

பெண் கைது

உடனே அந்த சாமியாடி பெண்ணும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோயில் நிர்வாகத்திடம் "நீங்க செய்றது நியாயமா" என கவிதா ராமு கேட்டார். இதையடுத்து அங்கிருந்த கோயில் நிர்வாகி, நாங்கள் யாரும் அவர்கள் வருவதை தடுக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக யாரும் வராததால் இவர்களும் வருவதில்லை என தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் இறையூர் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அய்யனார் கோயிலிலும் தண்ணீர் தொட்டி உள்ள பகுதியிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கோயில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கவிதா ராமு

கவிதா ராமு

மேற்கண்ட குற்றங்கள் நடந்தால் 9443314417 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோரின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ளதால் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது மிகப் பெரிய பிரச்சினையாகும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்கவே முடியாது. சாதிய பாகுபாடு கடைப்பிடித்து குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், இரட்டை குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு, குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

கவிதா ராமு

கவிதா ராமு

மேற்கண்ட குற்றங்கள் நடந்தால் 9443314417 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோரின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ளதால் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் சாதிய பாகுபாடு கடைப்பிடித்து குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், இரட்டை குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு, குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரட்டைக் குவளை, கோயிலில் அனுமதிக்காதது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலத்துடன் கழிவுநீர் கலந்தது தொடர்பாக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர். நீதிபதிகள் கூறுகையில் இந்த சம்பவம் மிகப் பெரிய பிரச்சினை. குற்றவாளிகள் யாரும் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. புதுக்கோட்டை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாகக்ல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

English summary
Chennai HC Madurai branch says that no offender will escape in the incident after human excrement was found in overhead tank supplying drinking water to SC people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X