Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பு: ஆயுள் சிறை காவல் துறைக்கு அச்சம் தராது! தூக்கு தண்டனையே சிறந்தது- நீதிபதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை காவல் துறைக்கு அச்சம் தராது, மரண தண்டனை விதிப்பதே சிறந்தது என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கு தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது.

sathankulam

நீதிபதி முத்துக்குமரன் கூறுகையில், இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள். படித்தவர்கள்.

அரிதினும் அரிதான வழக்கு. மரண தண்டனைதான் கொடுப்பதா என ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. ஆயுள் தண்டனை காவல் துறைக்கு ஒரு அச்சத்தை ஏற்படாது. தந்தை, மகன் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது.

அதிகாரம் இருப்பதால் எப்படியும் 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிடலாம் என்ற தைரியத்தில் அவர்களை அடித்துக் கொன்றுள்ளனர். இனி எந்த போலீஸாரும் இது போல் அடித்துக் கொல்ல கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது.

sathankulam

பெனிக்ஸின் தாயை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. கணவரையும் மகனையும் இழந்துள்ளார். 9 பேரின் இந்த கொடூர செயலால் ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவ்வாறு நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ். இருவரும் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது கடையை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சற்று கூடுதலாக திறந்து வைத்ததாக கூறி போலீஸார் தந்தை- மகனை கஸ்டடிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு போலீஸார் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் இருவரும் மரணமடைந்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த மரணத்திற்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தனர்.

ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பால்துரை ஏற்கெனவே உடல்நல பிரச்சினையால் இறந்துவிட்டார். மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

தனது தீர்ப்பில், காவல் துறையினரால் தாக்கப்பட்டதாலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர். போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இது போன்ற துன்புறுத்தல்கள் செய்யப்பட்டது எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான். அது மட்டுமல்லாமல் நாம் அடித்து பழக தந்தையும் மகனும் சிக்கிவிட்டார்கள் என அந்த காவலர்கள் பேசிக் கொண்டே அடித்ததாக நேரில் பார்த்த சாட்சியம் தெரிவித்திருந்தது என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

9 போலீஸாருக்கும் மரண தண்டனை விதித்து முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார். முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தூக்கு தண்டனையுடன் ரூ 15 லட்சம் அபராதத்தையும் விதித்துள்ளார். அது போல் மற்ற 8 பேருக்கும் தனித்தனியே அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அபராதங்கள் செலுத்த மறுத்தால் அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வழக்கறிஞர் ஜெயசிங் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+