ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா!
டாக்டர் சரவணன் தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்கிறார்.
மதுரை: அண்மையில் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன், வரும் 5ஆம் தேதி தனது ஆதரவாளர்களை பெருமளவில் அதிமுகவில் இணைக்கவுள்ளார்.
இதற்காக மதுரை புறநகரில் பிரம்மாண்ட மேடை அமைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணிகளை கவனித்து வருகிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் எடப்பாடி பழனிசாமி இந்த இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 5ஆம் தேதி மதுரை செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சரவணன்
அண்மையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன், இப்போது தனது ஆதரவாளர்கள், சமுதாயத்தினர் என பல தரப்பினரையும் அதிமுகவில் இணைக்கவுள்ளார். வரும் 5ஆம் தேதி காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மதுரையில் நடைபெறும் இந்த இணைப்பு விழாவில் 5,000 பேரிலிருந்து 10,000 பேர் வரை அதிமுகவில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் யோசனையின் பேரில் மதுரை புறநகரில் பிரம்மாண்ட மேடை அமைத்து வரும் சரவணன், 5ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாஸ் காட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இணைப்பு விழாவுக்கான முகூர்த்தக் கால் நடப்பட்டு வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், இரட்டை இலை சின்னம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற சூழலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டம்
டாக்டர் சரவணன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக இந்த இணைப்பு விழாவுக்கு மறுப்பேதும் சொல்லாமல் நேரமும், தேதியும் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மதுரையை போலவே விரைவில் தென் மாவட்டங்கள் முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்களை தனது தலைமையிலான அதிமுகவில் இணைக்க எடப்பாடி காய் நகர்த்தி வருகிறார்.

திருமண நிகழ்ச்சி
மதுரை மாவட்டத்திற்கு மட்டும் இம்மாதத்தில் எடப்பாடி பழனிசாமி 2 முறை வருகை தரவிருப்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 23ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் டி.கல்லுப்பட்டி அருகே திருமணம் நடைபெறவிருப்பது கவனிக்கத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications