Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி கட்டாமல் ஏமாற்றினால் இனி ஆக்‌ஷனே வேறயாம்.. “சொத்துகள் ஏலம் விடப்படும்”.. பரபர எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுரை : வருமான வரி கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றும், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வருமான வரித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரையில் நடந்தது.

இதில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், பின்னர் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

2,100 கோடி வருமான வரி வசூல்

2,100 கோடி வருமான வரி வசூல்

அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு, புதுச்சேரியில் வருமான வரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் 2,100 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் காலாண்டில் கூடுதலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம் புதுச்சேரி 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி இலக்கில் 70 சதவீதம் வரி வசூலித்துள்ளோம். அகில இந்திய அளவில் 17 சதவீத இலக்கை தாண்டி கூடுதலாக 11 சதவீதம் என 28 சதவீதம் வசூலித்துள்ளோம். வரும் நிதியாண்டில் 1.25 ஆயிரம் கோடி வசூலிக்க உள்ளோம்.

4வது இடம்

4வது இடம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 67 லட்சம். இதில் மதுரை மண்டலத்தில் 9 லட்சம் பேர் உள்ளனர். கடைசி வருடத்தில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10% பேர் புதிதாக வருமான வரி செலுத்தி வருகின்றனர். இந்திய அளவில் வரி வசூலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. வருமான வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மதுரை மண்டலத்தில் TDS ரிட்டர்ன் குறித்து ஆலோசனை வழங்கினோம்.வருமான வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள் குழப்பம் குறித்து வரி செலுத்துவோர் சந்தேகங்களை எழுப்பினர்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

வருமான வரித்துறையின் வரி செலுத்துவோருக்கான சேவையை சிறப்பாக செய்து வருகிறோம். அடுத்த காலாண்டில் இந்த வரி வசூல் அதிகமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது வருமான வரியில் ரீ-ஃபண்ட் பிரச்சனை இல்லை, மதுரை மண்டலத்தில் இந்திய அளவில் வரி வசூல் மிகக்குறைவு. வரி செலுத்துவோரின் புகார்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. விவாஸ்வே விஸ்வாகி என்ற முகாம் மூலமாக மதுரை மண்டலத்தில் 600 பேர் பயனடைந்துள்ளனர்.

ஏலத்தில் விடப்படும்

ஏலத்தில் விடப்படும்

வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளோம். வரி கட்டாதவர்கள் சொத்துகளை அடையாளம் கண்டு அவற்றை ஏலம் விட உள்ளோம். அதன் வழியாக வரியை வசூலிக்கவுள்ளோம். தற்போது வரி பாக்கி வைத்துள்ளவர்களின் டேட்டா பேஸ் விவரங்களை வைத்து அவர்கள் எங்கெல்லாம் சொத்துகளை வைத்துள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+