சொன்ன வேலையைக் கூட ஒழுங்கா முடிக்கலையே? சீறிய எடப்பாடி & கோ! ஓரம் கட்டப்படுகிறாரா ஆர்பி உதயகுமார்?
மதுரை : அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டியதால் இழந்த முக்குலத்தோர் சமுதாய ஆதரவை பெற்றுக் கொள்ளலாம் என ஆர்பி உதயகுமாரை எடப்பாடி பழனிச்சாமி களமிறக்கிய நிலையில், அதில் தோல்வி கண்டதோடு மாறாக எதிர்ப்பையே பெற்றிருக்கிறார் ஆர்பி உதயகுமார். இதனால் எடப்பாடி தரப்பு அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், மாற்ற மாஜி அமைச்சர்கள் ஆர்பி உதயகுமாரை ஓரம் கட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது மோதல் அதிகார மோதலாக மட்டுமல்லாமல் தற்போது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் போல கட்டமைக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலம் மற்றும் வடமாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் தருவதாகவும் முக்குலத்தை சேர்ந்த சசிகலா டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஓரம் கட்டியது இதன் காரணமாகத்தான் என தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
இதனிடைய அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதாகவும் அவர்களை சமாளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை களம் இறக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கினார். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் அவர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. குறிப்பாக திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகள்புதிதாக உருவாகி விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துமாறு ஆர்பி உதயகுமாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆர்பி உதயகுமார்
ஆனால் இரண்டு இடங்களிலும், சரிக்கிவிட்டார் ஆர்பி உதயகுமார். பல மாவட்டங்களில் இருந்து ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவியதோடு ஆர்பி உதயகுமார் கட்டுப்பாட்டில் உள்ள உசிலம்பட்டி பகுதி எம்எல்ஏ ஐயப்பனையும் தட்டி தூக்கினார் ஓபிஎஸ். இதன் காரணமாக எடப்பாடி தரப்பு ஆர்பி உதயகுமார் மீது கடும் அதிருப்தி அடைந்தது. மேலும் தேவர் தங்க கவச விவகாரத்திலும் ஆர்பி உதயகுமார் மென்மையான போக்கையே கையாண்டார்.

எடப்பாடி அதிருப்தி
திண்டுக்கல் சீனிவாசன் இயங்கிய அளவுக்கு கூட ஆர்பி உதயகுமாரின் செயல்பாடுகள் இருக்கவில்லை என கருதிய எடப்பாடி தரப்பு பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனையே முன்னிறுத்தியது. இதை அடுத்து பசும்பொன்னில் தேவர் குருபூஜை துவக்க நிகழ்ச்சியின் போது பசும்பொன்னுக்கு சென்ற ஆர்பி உதயகுமாருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேவர் நினைவிடத்தில் எடப்பாடி வாழ்க என முழக்கமிட்டதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆர்பி உதயகுமாரை கடுமையாக கண்டித்ததாகவும் அங்கிருந்து விரட்டியடித்ததாகவும் வீடியோக்கள் கூட பரவியது.

ஓரம் கட்டப்படுகிறாரா?
இதனால் முக்குலத்தோர் ஆதரவு ஆர்பி உதயகுமாருக்கு இல்லை என்பதை உணர்ந்த எடப்பாடி தரப்பு கடந்த சில நாட்களாகவே அவரது முக்கியத்துவத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர் பி உதயகுமாரின் சொந்த மாவட்டத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த போது கூட திண்டுக்கல் சீனிவாசனம் நத்தம் விஸ்வநாதன் அணிவித்தனர் செல்லு ராஜீவுக்கு பிறகு ஒரு ஓரமாகவே ஆர்பி உதயகுமார் நின்றார். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது மூத்த முன்னாள் அமைச்சர்களும் ஆர்பி உதயகுமாரை ஓரம் கட்டி வருவது உண்மைதான் என்கின்ற மதுரை மாவட்ட அதிமுகவினர். கொடுத்த அசைன்மென்ட்டை செய்து முடிக்காததன் காரணமாக அவர் மீது இபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே பசும்பொன் வருகையை கூட எடப்பாடி தவிர்த்தார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
-
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
இந்துக்களின் ஒரே பாதுகாப்பு திமுக.. பிடிஆரை வைத்து கொண்டு சொல்கிறேன்.. மதுரையில் கனிமொழி சம்பவம் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications