இது தான் மாற்றம்! அம்மா உணவகம் பெயர் பலகையில் கலைஞர் படம்..! அடடே ஆச்சரியக்குறி..!
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மதுரை: அம்மா உணவகம் பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படத்துடன் கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது மதுரைவாசிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். மாநகராட்சிகள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் பசியை போக்கும் அமுதசுரபியாக திகழ்கிறது அம்மா உணவகம். ஆட்சி மாறிய பின்னர் காட்சிகள் மாறுவது வாடிக்கைதான். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திமுக ஆட்சி அமைந்தது.

சென்னையில் சிலர் அம்மா உணவகத்தை தாக்கி சேதப்படுத்தினர். அந்த சம்பவம் சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன.
இந்நிலையில், அம்மா உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் இடம்பெற்றுள்ளது. ஒரே பெயர்பலகையில் ஜெயலலிதாவின் புகைப்படமும் கருணாநிதியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது மதுரை மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications