சஹ்யோக்னா என்ன? இந்தி வெறியர்கள்! மத்திய ரயில்வே முடிவால் கொதித்து போன எம்.பி சு.வெங்கடேசன்!
மதுரை: ரயில் நிலைய உதவி மையங்களின் பெயரை இந்தியில் 'சஹ்யோக்' என்று மாற்றியுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழி திணிப்பில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என, எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை பின்பற்றுவதால் தேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பது மத்தியில் ஆளும் பாஜகவின் கருத்தாக உள்ளது.

மொழி சர்ச்சைகள்
ஆனால், மத்திய அரசின் இந்த போக்கு, ஒற்றுமையை குலைக்கத்தான் பயன்படும் என்பது எதிர்க்கட்சியினர் விமர்சனமாக உள்ளது. சமீப காலமாக இத்தகைய சர்ச்சைகள் அடிக்கடி எழுந்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு தனது திட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் வைத்து பிரபலப்படுத்துவது அரசியல் தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழியில் சுற்றறிக்கை என அடிக்கடி மொழி சர்ச்சைகள் ஏற்படும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் மொழியாக முடிந்தவரை இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடந்த மே மாதம் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜிப்மரில் இந்தி திணிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறி தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

தவறான தகவல்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இது குறித்து விளக்கம் அளித்தார். அதில், "ஜிப்மரில் நிர்வாக ரீதியாக மட்டுமே அந்த சுற்றறிக்கை பகிரப்பட்டது. ஆனால் அதை தவறாக புரிந்துகொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்து பரவிக் கொண்டிருக்கிறது. ஜிப்மரில் இந்தி திணிப்பு எந்த விதத்திலும் இல்லை" எனக்கூறியிருந்தார்.

உத்தரவை திரும்ப பெற வேண்டும்
இந்த நிலையில், இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மதுரை லோக்சபா தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ''இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை "சஹ்யோக்" என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக தலையிட்டு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications