மதுரை மத்திய சிறையில் கைதிகள் மோதல்...பிளேடால் கீறியதால் காயம் - கற்களை வீசி தாக்குதல்
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது பிளேடால் உடலில் காயம் ஏற்படுத்தி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை: மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் ஜெயிலின் உள்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மாடி மீது ஏறி சாலையில் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு வீசி ரகளையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர்
பிளேடால் உடலில் காயம் ஏற்படுத்தி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை அரசரடி அருகே புதுஜெயில்ரோடு பகுதியில் உள்ளது மத்திய சிறைச்சாலை. இங்கு 1300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது
சிறையில் முதல் தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கைதிகள் ரகளை
இன்றைய தினம் மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட வந்த சிறைவாசிகள் இரு தரப்பினரிடையே திடிரென வாக்குவாதம் ஏற்பட்ட ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சிறைவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திய சிறைவாசிகள் சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்திக்கொண்டதாக தெரிகிறது.

சாலைகளில் விழுந்த கற்கள்
இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் சிறையின் மேல் தளத்தில் ஏறிக்கொண்டு கற்கள் மற்றும் பாட்டில்களை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் மீது எறிந்தனர். கத்தி கூச்சலிட்டபடியே ரகளையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையில் செல்லக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புது ஜெயில் சாலை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

சமாதானப்பேச்சுவார்த்தை
சிறைத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் இரு தரப்பினரின் மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கல்வீச்சில் ஈடுபட்ட சிறைவாசிகளை சிறைத்துறை காவலர்கள் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். மேலும் மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறை வளாக மருத்துவர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

கற்கள் வீச்சு
மதுரை மத்திய சிறையில் 2019 ஆம் ஆண்டு சிறைவாசிகள் அடிப்படை வசதிகள் கோரி சிறைச்சாலை சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறை வளாகத்திலேயே சிறைவாசிகள் பாட்டில்கள், கற்களை எறிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைவாசிகள் மோதலை தொடர்ந்து சிறை வளாகத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications