கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் வெட்டுவேன்.. அது என் தர்மம்.. டி.ஆர்.பாலு பகிரங்க எச்சரிக்கை!
பகிரங்கமாக மிரட்டும் வகையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
மதுரை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் தாம் வெட்டுவேன் என மிக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு.
ஏற்கனவே அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் இருந்து வரும் முதல்வருக்கு டி.ஆர்.பாலு பேச்சு புது தலைவலியை உருவாக்கியுள்ளது.
திமுகவின் பொருளாளர், திமுக மக்களவைக் குழுத் தலைவர் என உயர்ந்த பொறுப்புகளில் இருந்துக் கொண்டு, வெட்டுவேன், குத்துவேன் என டி.ஆர். பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடர் கழகம்
சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் திராவிடர் கழகம் நடத்திய திறந்தவெளி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சற்று உணர்ச்சிவசப்பட்டு மனதில் தோன்றிய அனைத்தையும் கொட்டித்தீர்த்தார். யாராவது தனது தலைவரையோ, திக தலைவர் வீரமணியையோ சீண்டினாலோ தாக்க வந்தாலோ தாம் கையை வெட்டுவேன் என மிக பகிரங்கமாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.

எனக்கு பலம்
கீ.விரமணியால் திருப்பி அடிக்க முடியாது, ஏனென்றால் அவரிடம் பலம் இல்லை. என்னிடம் பலம் இருக்கிறது, அதனால் நிச்சயம் திருப்பி அடிப்பேன் என டி.ஆர்.பாலு பேசினார். மேலும், கீ.வீரமணி மீது கை வைக்க முயன்றவரை தாம் வெட்டுவது தன்னை பொறுத்தவரை தர்மம் என்றும் நியாயம் எனவும் கூறினார். எதற்காக டி.ஆர்.பாலு இப்படி திடீரென உணர்ச்சிவசப்படுகிறார் என்பது புரியாமல் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் குழம்பினர்.

பாஜக அரசுக்கு சாபம்
முன்னதாக தமிழர்களின் பாவம் பொல்லாதது என்றும் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் மீண்டும் பாஜகவால் வெற்றிபெற முடியாது எனவும் சாபம் விடுத்த டி.ஆர். பாலு, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பட்டியலிட்டு பேசினார். தன்னை எல்லோரும் முரடந் என்கிறார்கள், ஆம் முரடன் தான், எங்கே தவறு நடக்கிறதோ அங்கே முரடனாக மாறுவேன் என டி.ஆர்.பாலு பஞ்ச் டயலாக் அடித்தார்.

குழப்பம்
சேது சமுத்திர திட்டத்தின் அவசியம் பற்றி பேசச் சொன்னால், எதற்காக கையை வெட்டுவேன் என சம்பந்தமில்லாத தலைப்புக்குள் செல்கிறார் பாலு எனத் தெரியாமல் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குழப்பம் அடைந்தார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications