சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு.. "நாங்கள் கட்டுப்படுவோம்" மதுரையில் 'தர்மயுத்தம்' ஓபிஎஸ் பேட்டி!
மதுரை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனிடையே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் செயல்பட்டு வருகிறார். அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் துணைத் தலைவராக ஆா்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிசாமி பல முறை கடிதம் கொடுத்துள்ளார்.

ஓபிஎஸ் கடிதம்
அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக நிர்வாகிகள் மாற்றம் தொடா்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், எங்களை ஆலோசித்தே எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு இன்னும் அவரின் முடிவை அறிவிக்கவில்லை.

ஓபிஎஸ் பேட்டி
இதனால் நாளை கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டம் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டப்பேரவையில் குரல் கொடுப்போம் என்று தெரிவித்தார்.

சபாநாயகர் முடிவு
தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்றத்தைப் பொறுத்தவரை பேரவைத் தலைவரின் முடிவு தான் இறுதியானது. அவர் என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்தார்.

எதிரெதிர் அல்ல
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியோடு எதிர் அரசியல் செய்து வந்த நிலையில், அருகருகே அமர்ந்து பேச வேண்டிய நிலை வந்துள்ளது பற்றிய கேள்விக்கு, எதிரெதிரே இருக்கிறோம் என நீங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக கழகத்தை உருவாக்கினாரோ, அதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் எங்களுடைய நடவடிக்கை இருக்கும்.

தொண்டர்களின் உரிமை
ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த இயக்கத்தை தாங்கி பிடித்து 50 ஆண்டு காலம் உயிர்ப்பித்த இயக்கமாக வைத்திருக்கிறார்கள். தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உறுப்பினர்கள் அந்தஸ்து எந்த நேரத்திலும் பாதிக்கப்பட விடக்கூடாது. எம்ஜிஆர் தொண்டர்களுக்கு மிகப்பெரிய உரிமைகளை வழங்கியுள்ளார். அந்த உரிமை எந்த நிலையிலும் பறிபோகவிடாமல் தடுப்பது தான் எங்கள் நோக்கம். சாதாரண தொண்டன் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது.

தர்மயுத்தம்
10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் போட்டியிடுவதற்கு தலைமைக் கழக நிர்வாகியாக ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரவில்லை. இப்போது வருபவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை கழக சட்ட விதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கி இருக்கிறார்களோ அதன்படி தான் நடக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இப்போது தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

விரைவில் சுற்றுப்பயணம்
தொடர்ந்து, சுற்றுப்பயணம் ஆரம்பிப்பதற்கு முன் முக்கிய தலைவர்களை முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் இருந்தவர்கள் அவர்கள் மீது பாசமும் பற்றும் இருப்பவர்களை தான் நான் சந்தித்து வருகிறேன் என பேசினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications