அர்னால்டு பாடி ஆசை.. அதிக எடையால் வந்த ஆபத்து! மாரடைப்பால் இளைஞர் மரணம்! நிபுணர்கள் சொல்வதென்ன?
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கமலேஸ்வரன். இவரது மகன் ஸ்ரீவிஷ்ணு . இவர் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கமலேஸ்வரன். இவரது மகன் ஸ்ரீவிஷ்ணு . இவர் ஐ.டி., நிறுவனதத்தில் பணியாற்றி வருகிறார்.
தினமும் மாடக்குளம் விநாயகர் நகர் பகுதியில் உள்ள 'பிட்னஸ்' சென்டரில் கடந்த 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

கடின உடற்பயிற்சி
இந்நிலையில், வழக்கம் போல உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஸ்ரீவிஷ்ணுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக ஸ்ரீவிஷ்ணுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர் மரணம்
இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்ரீவிஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்நிலையில் அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வென்ட்ரிகுலர் அரித்மியா எனப்படும் தீவிர இதய பிரச்சினை ஏற்படும் எனவும், இது திடீர் மரணத்தை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வார்ம் அப் செய்து உடற்பயிற்சிகளை தொடங்குவது சரியான வழி என கூறும் அவர்கள் உடற்பயிற்சி நிபுணர்களின் மேற்பார்வையில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மாரடைப்புக்கு வாய்ப்பு
அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் குறுகிய கால ஆபத்துகள் என்னவென்றால், தசைவலி, சோர்வு, தீவிர மனநிலை குழப்பம், தூக்க சிக்கல்களை சந்திப்பார்கள். இது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடின உடற்பயிற்சி செய்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications