தோழி அழகா இருக்கீங்க! பள்ளி மாணவிகளே குறி! போன் முழுவதும் ’அந்த’ வீடியோ! தொக்காய் சிக்கிய சந்துரு!
மதுரை : மதுரையில் பேஸ்புக் மூலம் பழகி பள்ளி மாணவிகளிடம் நகை பணத்தை பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததோடு அவர்களுடன் தவறாக நடந்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்து மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் பேஸ்புக் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் பேஸ்புக் மூலம் பள்ளி மாணவிகளுடன் தவறாக நடந்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்து மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரையில் அதிர்ச்சி
மதுரை மாநகர் அய்யர்பங்களாவை சேர்ந்த சந்துரு என்ற இளைஞர் சைக்காலஜி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரி முதலாம் ஆண்டில் பேஸ்புக் மூலமாக மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் நட்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாகவும் கூறி பழகி வந்துள்ளார்.

நகைகள் அபேஸ்
மேலும் தனது குடும்ப வறுமையை கூறி பள்ளி மாணவியிடம் அவ்வப்போது வீட்டிலிருந்து தங்க நகைகளை எடுத்து வரவைத்து சிறிது சிறிதாக 13 பவுன் நகையை விற்று பணத்தை வாங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து இருசக்கர வாகனம், விலையுயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகளை வாங்கி ஆடம்பரமாக செலவழித்து வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
மேலும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அதோடு நிறுத்தாமல் மாணவியின் தோழிகள் 3 பேருடன் பழகியுள்ளார். ஒருவருக்கொருவர் தெரியாமல் அனைவரையும் தனியாக அழைத்து சென்று ஏமாற்றியுள்ளார். அதனையும் வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியுள்ளார்.

50 வீடியோ
இந்நிலையில், இதுதொடர்பாக மாணவி ஒருவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் சந்துருவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் செல்போனில் மாணவிகளுடன் தனிமையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். மாணவிகளை ஏமாற்றி வாங்கிய இருசக்கர வாகனம், செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications