For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க பிள்ளைங்க மாதிரி பாத்துக்கனும்! ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை : மதிப்பெண் பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுத்தம் அளிப்பதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும் எனவும், ஆசிரியர்கள் தங்களுக்கு பிள்ளைகளைப் போல மாணவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அடுத்த அம்மூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய 10 விஷயங்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்ய வாய்ப்பில்லை! உள்ளே வந்தது யார் என விசாரிங்க! வேல்முருகன் காட்டம் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்ய வாய்ப்பில்லை! உள்ளே வந்தது யார் என விசாரிங்க! வேல்முருகன் காட்டம்

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை சுலபமாக இழந்து விடுவதால் தவறான முடிவுகளை எடுத்து விடுவதாகவும், வெறும் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

பல திட்டங்கள்

பல திட்டங்கள்

பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது .தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள் என்பதை முதல்வர் அறிந்த காரணத்தினால் கல்வி சுகாதாரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பார்த்துக்கொள்ள வேண்டும்

பார்த்துக்கொள்ள வேண்டும்

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும் ஆசிரியர்கள் தங்களுக்கு பிள்ளைகளைப் போல மாணவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்

Recommended Video

    அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. மாணவர், ஆசிரியர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
    உரிய நடவடிக்கை

    உரிய நடவடிக்கை

    கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை குறிப்பிட்டு, அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    English summary
    tamilaga valvurimai katchi President Velmurugan said that it should be clarified whether the Kallakurichi student committed suicide or was murdered and there is no possibility of her committing suicide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X