கொடுமை..! மறைந்த 83 வயது ஸ்டேன் சுவாமிக்கு.. ஒற்றை டம்ளரை கூட வழங்க மறுத்த என்ஐஏ
மும்பை: இன்று உயிரிழந்த 85 வயதான ஸ்டேன் சுவாமி, மும்பையிலுள்ள தலோஜா மத்தியச் சிறையிலிருந்த போது ஸ்ட்ரா பொருந்திய டம்ளர் ஒன்றைக் கூட மத்திய அரசு அவருக்குக் கொடுக்கவில்லை.
Recommended Video
திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த சில வாரங்களாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்டேன் சுவாமி காலமானார்
ஸ்டேன் சுவாமி உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 84 வயதான ஸ்டேன் சுவாமியை மத்திய அரசு நடத்திய விதம் குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எல்கர் பரிஷத் வழக்கில், மவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2020 அக்டோபர் மாதம் உபா சட்டத்தின் கீழ் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டார். இந்தியாவில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வயதான நபர்களில் இவரும் ஒருவர்.

பர்கின்ஸன் நோய்
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். மறுநாள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தலோஜா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஏற்கனவே செவித்திறனை இழந்திருந்தார். மேலும், பர்கின்ஸன் நோய் காரணமாக ஸ்டேன் சுவாமியால் டம்பளரை கைகளால் பிடிக்க முடியாது.

ஸ்ட்ரா பொருந்திய டம்ளர்
இதனால் தனக்கு ஸ்ட்ரா பொருந்திய டம்ளரைத் தர வேண்டும் என்று கடந்த நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சாதாரண ஸ்ட்ரா பொருந்திய டம்ளர் அளிப்பது தொடர்பான இந்த கோரிக்கைக்குப் பதிலளிக்க 20 நாட்கள் அவகாசம் கேட்டு வாங்கியது தேசிய புலனாய்வு முகமை. இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஷாக் கொடுத்த என்ஐஏ
20 நாட்களுக்குப் பின்னர்கூட, ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்ட போது ஸ்ட்ரா பொருந்திய டம்ளர் எதையும் தாங்கள் கைப்பற்றவில்லை என்று கூறி அதிர்ச்சி அளித்தது என்ஐஏ. 83 வயது முதியவர் ஒருவரை இப்படிதான் நடத்துவீர்களா என பலரும் கொந்தளித்தனர். ட்விட்டரில் straw and sipper என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இருப்பினும், எதற்கு என்ஐஏ மனமாறவில்லை. இதையடுத்து சில வழக்கறிஞர்கள் தான் கடந்த டிசம்பர் மாதம் ஸ்டேன் சுவாமிக்கு ஸ்ட்ரா பொருந்திய டம்ளரை அனுப்பி வைத்தனர்.

ஜாமீன் மறுப்பு
தனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்டேன் சுவாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அவர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதால் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக சென்றதைத் தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பின்னரே அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒருநாள் கூட விசாரணை இல்லை
கொரோனா பரவல் காரணமாகச் சிறையிலுள்ள கைதிகள் பலருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது. அப்போதுகூட 84 வயதான ஸ்டேன் சுவாமிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. சிறையிலிருந்த அவருக்கு, கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 8 மாதங்களாக ஸ்டேன் சுவாமி சிறையிலிருந்த போதும், ஒரு நாள் கூட அவரை என்ஐஏ விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications