ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் தேசியவாத காங்கிரஸ் சித்து விளையாட்டு: பாஜக குற்றச்சாட்டு
மும்பை: நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒரு "போலி கதை" உருவாக்கப்படுவதாக மும்பை பாஜக தலைவர் மோஹித் கம்போஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சில மகாராஷ்டிர அமைச்சர்கள் ஷாருக் கானிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு (NCP) போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு நெருக்கமான சுனில் பாட்டீல் என்ற நபரே இந்த வழக்கில் சதிக்கு மூளையாக செயல்பட்டதாக கம்போஜ் இன்று தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சுனில் பாட்டீல் அக்டோபர் 1 ஆம் தேதி சாம் டிசோசாவுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியுள்ளார். மேலும் கப்பலில் நடைபெற உள்ள விருந்தில் சட்டவிரோத போதைப்பொருள்களை உட்கொள்ளலாம் எனவும், தான், 27 பேரை அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆர்யன் கான் மற்றும் பலர் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சாம் டிசோசாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆர்யன் கானுடன் அவர் எடுத்த செல்ஃபி வைரலாக பரவிய வழக்கில் போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சியின் சாட்சியான கிரண் கோசாவி, ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் இருந்து 50 லட்சம் வாங்கியதாக டிசோசா தனது மனுவில் கூறியிருந்தார். இவ்வாறு காம்போஜ் கூறினார்.
மேலும் காம்போஜ், பாட்டீல் தொடர்பான ஒரு ஆடியோவை செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்தார். மகாராஷ்டிரா அமைச்சர்கள் போதைப்பொருள் கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மாநில அரசு விருந்தினர் மாளிகையில், முன்னாள் உள்துறை அமைச்சர் தேஷ்முக்குடனும் பதான் என்பவர் சந்திக்கும் படங்களை செய்தியாளர் சந்திப்பில் காம்போஜ் பகிர்ந்தார்.
தாவூத் இப்ராகிமின் உதவியாளராகக் கூறப்படும் பதான், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இந்த ஆண்டு ஜனவரியில் என்சிபியால் கைது செய்யப்பட்டார். என்சிபி அமைச்சரின் மருமகனும் இந்த சந்திப்பில் இருந்ததாக காம்போஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சுனில் பாட்டீல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனான தனது உறவை தேசியவாத காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மோஹித் கம்போ தெரிவித்தார்.
இந்த முழு சோதனைக்கும் மூளையாக செயல்பட்டவர் என்சிபி தலைவர் சுனில் பாட்டீல் என்று மோஹித் கம்போஜ் குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் மகன் ரிஷிகேஷுடன் சுனில் பாட்டீல் நெருங்கிய நட்பைக் கொண்டவர். அனில் தேஷ்முக் மட்டுமின்றி, மகாராஷ்டிர அரசின் பல அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது.
கிரண் கோசாவி என்சிபி தலைவர் சுனில் பாட்டீலின் ஆள் என்று மோஹித் கம்போஜ் குற்றம் சாட்டினார். பாட்டீலின் உத்தரவின் பேரில்தான் சாம் டிசோசா போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஏஜென்சி அதிகாரி வி.வி.சிங்கை கிரண் கோசாவியை சந்திக்க வைத்தார். பின்னர் எல்லாமே கிரண் கோசாவியின் மேற்பார்வையில் செய்யப்பட்டது. இவ்வாறு காம்போஜ் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications