ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்காக ஆஜரான முன்னாள் அட்டார்னி ஜெனரல்.. அனல் பறந்த வாதம்.. கிடைத்த ஜாமீன்
மும்பை: போதைமருந்து வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் பெற்று தருவதில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பங்களிப்பு மிக அதிகம் என்கிறார்கள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான உல்லாசக் கப்பலான 'எம்பிரஸ்' மும்பையிலிருந்து அக்டோபர் 2ம் தேதி சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலுக்கு சென்று கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்தனர். அங்கிருந்த ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யான் கான் அக்டோபர் 8ம் தேதி மும்பை ஆர்துர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

மும்பை உயர் நீதிமன்றம்
ஜாமீன் கோரி ஆர்யன் கான் இரண்டு மனுத் தாக்கல் செய்த நிலையில் இரண்டுமுறை அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 3 நாட்களாக வாத விவாதங்கள் நடைபெற்றன. ஆர்யன் கானுக்காக முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதிட ஏற்பாடு செய்தார் ஷாருக் கான். அவர் வந்த பிறகு வழக்கில் வாதங்கள் அனல் பறந்தன.

சட்ட வல்லுநர்கள் குழு
சதீஷ் மனேஷிண்டே மற்றும் அமித் தேசாய் போன்ற பிரபல வக்கீல்கள் ஷாருக்கான் மகனுக்கான சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றனர். இதன்பிறகு, ஆர்யனின் வழக்கறிஞர் குழுவில் முகுல் ரோஹத்கி புதிதாக சேர்க்கப்பட்டார். இந்தியாவின் 14வது அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர் முகுல் ரோஹத்கி. உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரான இவர், இதற்கு முன்பு நாட்டின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார். இவர் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அவாத் பிஹாரி ரோஹத்கியின் மகன் ஆவார்.

குஜராத் கலவர வழக்கு
66 வயதான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நீதிமன்றத்தில் பல முக்கிய மற்றும் முக்கியமான வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளார். ரோஹத்கி 2002 குஜராத் கலவர வழக்கிற்காக குஜராத் அரசு சார்பில் ஆஜரானவர். இப்படியான அனுபவம் கொண்ட நாட்டில் மிக மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி ஆர்யன் கானுக்காக கடந்த இரண்டு நாட்களாக வாதாடி வந்தார். இந்த நிலையில் தான் ஆர்யன் கானுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. கடைசி நாளான இன்றும் கூட மும்பை உயர்நீதிமன்றத்தில் அனல்பறக்கும் வாத விவாதங்கள் நடைபெற்றன.

நாளை அல்லது நாளை மறுநாள்
இறுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யனுடன், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஆர்யன் கான் சிறையில் இருந்து வெள்ளி அல்லது சனிக்கிழமை விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது. வெள்ளிக்கிழமை உத்தரவு நகல் சிறை நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். உத்தரவு நகல் சிறைக்கு வந்த பிறகே விடுதலைக்கான நடவடிக்கை தொடங்கும். ஆனால் உத்தரவு நகல் தாமதமானால், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோரை சனிக்கிழமை மட்டுமே ரிலீஸ் ஆகுவார்கள்.

மூன்று நாட்கள் வாதங்கள்
மூன்று நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு நீதிபதி நிதின் சாம்ப்ரே வியாழக்கிழமையான இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது ஆர்யன் கான் கைதாகி 21 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஆர்யன், அர்பாஸ், முன்முன் ஆகிய 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கானுக்காக வாதாடினார். அர்பாஸ் மெர்ச்சண்ட் சார்பாக அமித் தேசாய் மற்றும் முன்முன் தமேச்சாவுக்காக அலி காஷிப் கான் ஆகியோர் வலுவான வாதங்களை முன்வைத்தனர்.

பல வருடங்களாக போதை
நீதிமன்றத்தில் போதை தடுப்பு பிரிவு சார்பில் மூத்த வக்கீல் அனில் சிங் ஆர்யனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் முகுல் ரோகத்கி தனது வலுவான வாதங்களால் ஆர்யன் ஜாமீன் பெறுவதை உறுதி செய்தார். வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், ஜாமீன் மனுவை எதிர்த்து அனில் சிங் வாதிடுகையில், ஆர்யன் போதைப்பொருள் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அவர் பல ஆண்டுகளாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளார், அதற்கான ஆதாரம் உள்ளது. அவர் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் வாதிட்டார்.

ஆர்யன் கான் தரப்பு வாதம்
ஆனால் கப்பலில் 1300 பேர் இருந்ததாகவும் அவர்களில் அர்பாஸ் மற்றும் ஆர்யனுக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாகவும் அவர்கள்தான் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என்றும் முகுல் ரோஹத்கி வாதிட்டார். எஞ்சிய 1300 இல் யாருக்கும் யாரையும் தெரியாது என்பதால் இதில் எந்த சதியும் இல்லை என்பது முகுல் ரோகத்கி வாதம்.

ரோஹத்கி வலுவான வாதம்
ரோஹத்கி மேலும் வாதிடுகையில்: அர்பாஸ் எதை எடுத்துச் செல்கிறார் என்று ஆர்யனுக்குத் தெரியாது. இந்த வழக்கில் சதி என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு ஹோட்டலில் வெவ்வேறு அறைகளில் இருப்பவர்கள், அவரவர் அறைகளில் புகைபிடித்தால் அனைவரும் கூட்டாக புகையிலை பயன்படுத்தும் சதியில் ஈடுபட்டார்கள் என்று சொல்ல முடியுமா. அதேபோலத்தான் கப்பலில் இருந்த எல்லோரும் சதியில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதும். இவ்வாறு அவர் வாதத்தை முன் வைத்தார்.

தாயின் விரதம்
ஆர்யனின் ஜாமீன் மூலம் அவரது தாய் கவுரி சபதமும் நிறைவேறியுள்ளது. ஆர்யன் கான் விடுதலையாகி வீட்டிற்கு வரும் வரை இனிப்பு சாப்பிட மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார் கவுரி. நவராத்திரி நேரத்தில் வீட்டில் இனிப்பு பாயாசம் செய்ய வேலைக்காரர்களுக்கு கவுரி தடை போட்டதாக தகவல்கள் வந்தன. தீவிர நோன்பில் இருந்தார் கவுரி. ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது வீட்டில் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. நவம்பர் 2 ஆம் தேதி ஷாருக்கின் பிறந்தநாள் வருகிறது. ஆர்யனின் விடுதலை அவருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கப்போகிறது. தனது பிறந்த நாள் மற்றும் தீபாவளிக்கு மகன் தன்னோடு இருக்கப்போவதை நினைத்து ஷாருக்கான் மகிழ்ச்சியிலிருப்பதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications