இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்
மும்பை: ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் அறிவித்திருந்தது. இருப்பினும், இதில் இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு தருவதாக ஈரான் அறிவித்து இருந்ததாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் போர் தீவிரமடைந்த பிறகு, முதல்முறையாகச் சரக்கு கப்பல் ஒன்று ஹார்முஸ் துறைமுகத்தைக் கடந்து பத்திரமாக இன்று மும்பையை அடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்குகிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேலை குறிவைத்து ஈரான் தாக்குகிறது. மேலும், வளைகுடாவில் உள்ள இதர அமெரிக்க முகாம்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

ஹார்முஸ் ஜலசந்தி
சவுதி, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிடம் இருந்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் நம் நாட்டுக்குக் கச்சா எண்ணெய் வருகிறது. இதற்கிடையே மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் பத்துவரத்து முடக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் சூழல் உருவானது. இது தொடர்பாக மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
மும்பை வந்தடைந்தது
இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் வழியாக இந்தியக் கப்பல் பாதுகாப்பாகப் பயணித்துள்ளது. அந்த ஆயில் டேங்கர் கப்பல் இப்போது மும்பையை அடைந்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டுவந்த லைபீரியா கொடியுடன் கூடிய இந்த கப்பல், மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. 'ஷென்லாங் சூஸ்மேக்ஸ்' என்ற இந்த கப்பல், 1,35,000 மெட்ரிக் டன்னுக்கும் மேலான கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு சப்ளை குறித்த அச்சம் அதிகரித்துள்ள சூழலில், இது நிம்மதி தருவதாக அமைகிறது.
கடந்த மார்ச் 1ம் தேதி சவுதி அரேபியாவின் ராஸ் தனூரா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த ஷென்லாங் சூஸ்மேக்ஸ் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. மார்ச் 8ம் தேதி இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்குள் இருந்ததாக கடல்சார் கண்காணிப்பு டேட்டா காட்டுகின்றன. மும்பை வந்தடைந்த இந்த எண்ணெய் மாஹுல் சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும்.
தாக்குதல்கள்
ஈரானின் அச்சுறுத்தலால் ஹார்முஸ் ஜலசந்தி கடுமையான தடங்கல்களைச் சந்திக்கிறது. உலகின் 20% கச்சா எண்ணெய் இந்த வழியே செல்கிறது. அங்கு, இந்தியாவை நோக்கி வந்த தாய்லாந்தின் 'மயூரி நாரி' கப்பல் மீது புதன்கிழமை தாக்குதல் நடந்தது. இதுபோல அனைத்து கப்பல்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு லிட்டர் எண்ணெய்யைக் கூட இந்த வழித்தடம் வழியாக அனுமதிக்க மாட்டோம் என ஈரான் அறிவித்து இருந்தது.
பேச்சுவார்த்தை
முன்னதாக இன்றைய தினம் தான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராச்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இந்தியா செல்லும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இதை ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
இப்போது 28 இந்தியக் கப்பல்கள் தற்போது வளைகுடா பகுதியில் உள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே 677 மாலுமிகளுடன் உள்ளன. மீதமுள்ள நான்கு கப்பல்கள் ஜலசந்திக்கு கிழக்கே 101 மாலுமிகளுடன் உள்ளன.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா?












Click it and Unblock the Notifications