மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சன்னி லியோனுக்கு 3 நாள் கெடு... இல்லையென்றால்.. எச்சரிக்கும் ம.பி. அமைச்சர்

Google Oneindia Tamil News

மும்பை: இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பாடல் வெளியிட்டுள்ள சன்னி லியோன் மற்றும் பாடகர்கள் ஷரிப், ஜோஷி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா எச்சரித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி யூடியூபில் சன்னிலியோனின் புதிய ஆல்பம் வெளியிடப்பட்டது. மதுபான் மே ராதிகா நாச்சே பாடல் யூ டியூபில் தற்போது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்! அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!

கடந்த 1960 ஆம் ஆண்டு கோஹினூர் திரைப்படத்திற்காக முகமது ரஃபி என்பவரால் பாடப்பட்ட இந்த பாடலில் இடம்பெற்ற மதுபான் மே ராதிகா நாச்சே என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு தற்போது இந்த வீடியோ ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலில் சன்னி லியோன் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாகவும் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இந்து உணர்வுகளை புண்படுத்தியதாக ஏற்கனவே சில இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சன்னி லியோனுக்கு எச்சரிக்கை

சன்னி லியோனுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் நடித்துள்ள சன்னி லியோன் பாடகர்கள் ஷரிப் மற்றும் ஜோஷி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மதுபான் மே ராதிகா, ஜைசே ஜங்கிள் மீ நாச்சே மோர் இசை வீடியோவை மூன்று நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என எச்சரித்துள்ளார். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

வீடியோவுக்கு கண்டனம்

வீடியோவுக்கு கண்டனம்

சில விஷமிகள் தொடர்ந்து இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தி வருவதாகவும் ராதிகா நாச்சே வீடியோ கண்டனத்திற்குரிய ஒரு முயற்சி என்றும், சன்னி லியோன் , ஷரிப், ஜோஷி ஆகியோரை நான் எச்சரிக்கிறேன், இந்துக்களின் மனதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்த வீடியோவை மூன்று நாட்களுக்குள் நீக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்ப்பு

ஏற்கனவே எதிர்ப்பு

இந்தப் பாடலுக்கு தற்போது மட்டும் எதிர்ப்பு எழவில்லை ஏற்கனவே இந்த பாடலில் சன்னிலியோனின் நடனம் ஆட்சேபனைக்குரிய இருப்பதால் மதுராவைச் சேர்ந்த சாமியார்கள் வீடியோவை தடை செய்யக் கோரி ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு சன்னி லியோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம் என விருந்தாவன் அமைப்பின் சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறியிருந்தார். இதேபோல அகில பாரதிய தீர்த்தா புரோகித் மகாசபையின் தேசிய தலைவர் மகேஷ் பதக் இழிவான முறையில் பாடலை வழங்கியதன் மூலம் சன்னி லியோன் புண்ணிய பூமியின் மார்பை களங்கப் படுத்தி உள்ளார் என ஏற்கனவே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்கனவே மருத்துவ மிஸ்ரா ஆடை வடிவமைப்பாளர் சாப்யசாச்சி முகர்ஜியின் மங்கல்சூத்ரா விளம்பரத்தில் ஆட்சேபனைக்குரிய ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனை 24 மணி நேரத்திற்குள் வாபஸ் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து சாப்யசாச்சி அந்த விளம்பரத்தை வாபஸ் பெற்றார். இதேபோல நரோத்தம் மிஸ்ராவின் எச்சரிக்கைக்குப் பிறகு ஓரின சேர்க்கை ஜோடி இடம்பெற்ற கார்வ செளத் விளம்பரமும் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Madhya Pradesh Home Minister Narodham Mishra has warned that Sunny Leone and singers Sharif and Joshi, who have released songs that offend Hindus, should apologize or face stern action against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X