'ஒரு முறை இல்லை.. பல முறை ஆர்யன் கான் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார்..' NCB கொடுத்த அடுத்த ஷாக்
மும்பை: ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் வழக்கறிஞர், அவர் வழக்கமாகப் போதைப்பொருள் எடுக்கும் பழக்கம் உடையவர் என்று வாதிட்டார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் அக். 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்டி நடைபெற உள்ளதாகவும் இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்த உள்ளதாகவும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மாறுவேடத்தில் சொகுசு கப்பலில் ஏறிய என்சிபி அதிகாரிகள், அங்கு ம் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதை உறுதி செய்தனர்.

ஆர்யன் கான் கைது
மேலும், என்சிபி அதிகாரிகள் சொகுசு கப்பலில் நடத்திய அதிரடி சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்றைய விசாரணையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை என்று தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரினர்.

போதைப்பொருள் இல்லை
அதேநேரம் ஆர்யன் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது பொய்யான வழக்கு என்பவரும் அவரை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று வாதிட்டார். மேலும், கைது செய்யப்பட்ட போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். ஆர்யன் கானிடம் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கூட அவருக்குப் போதைப் பொருள் சப்ளே செய்பவர்கள் அவருடன் கப்பலில் இருந்ததாக என்சிபி வழக்கறிஞர் வாதிட்டர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி இன்று ஒத்தி வைத்தார்.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு வழக்கறிஞர் வலியுறுத்தினார். மேலும், ஆர்யன் கான் வழக்கமாகப் போதைப்பொருளை எடுத்துக் கொள்பவர் தான் என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்யன் கான் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் வாதிட்டார். மேலும், மகாத்மா காந்தியின் இந்த நாட்டில், போதைப்பொருள் இளைஞர்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். மேலும், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் உரையாடல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒத்திவைப்பு
அப்போது குறிக்க ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர், இரண்டு நண்பர்களுக்கு இடையே நடக்கும் தனிப்பட்ட உரையாடல்களை வெளியாட்கள் பார்க்கும்போது, அது எளிதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் அக். 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நாளை (அக். 15) தொடங்கி அக். 19 வரை அடுத்த நான்கு நாட்கள் துர்கா பூஜை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதனால் வழக்கு விசாரணையை அக். 20ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications