நாட்டுக்கு எதிரான போர்.. எல்கர் பரிஷத் வழக்கின் கைதானவர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றச்சாட்டு
மும்பை: எல்கர் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் கலவரம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் வரைவு குற்றப் பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புனே நகரில் எல்கர் பரிஷத் என்ற மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக இடதுசாரி தலைவர்கள் மற்றும் சில எழுத்தாளர்கள் பேசியதாகவும் குற்றச்சாட்டு பதிவானது.
மறுநாள் அதாவது, 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, புனே மாவட்டம் பீமா- கோரேகானில் போர் வெற்றி நினைவு தினத்தில் திடீரென சாதிய வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவோயிஸ்ட் உடன் தொடர்பு இருப்பதாக புனே போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கைதானவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது பாஜக கூட்டணி ஆட்சி மகாராஷ்டிராவில் நடந்து வந்தது.
இந்த நிலையில் சிவசேனா தலைமையில் அமைந்த கூட்டணி அரசு எல்கர் பரிஷத் வழக்கில் மறுவிசாரணை நடத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் திடீர் திருப்பமாக எல்கர் பரிஷத் வழக்கை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றிக்கொண்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பழங்குடியின போராளி, ஸ்டேன் சுவாமி சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில்தான், இந்த வழக்கில் குற்ற வரைவு அறிக்கையை தேசிய புலனாய்வு முகமை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வரைவு அறிக்கை தொடர்பான தகவல்களை தற்போது பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய 15 குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது 17 புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள், குடிமை போராளிகள் இடதுசாரிகள் உள்ளிட்ட 15 பேர் மீது சட்டவிரோதமாக நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை தடுப்புச்சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கருத்தரங்கு மற்றும் கலவரத்தின் பின்னணியில் இருக்கிறார்கள். மக்கள் ஆட்சி என்ற பெயரில் ஒரு அரசை நிர்மாணிக்க வேண்டும் என்பது இவர்களின் திட்டம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியை நடத்துவது இவர்கள் நோக்கம். இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக இவர்கள் போர் தொடுத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், வன்முறையை தூண்டும் விதமான பாடல்கள், சிறு நாடகங்கள் போன்றவற்றை புனே நகரில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டின்போது நடத்தியுள்ளனர். நக்சல் புத்தகங்களை வழங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் பிரிவினைவாதம் மற்றும் வன்முறை எண்ணங்களை தூண்டுவதே அவர்கள் நோக்கமாக இருந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நபர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் பக்கம் இழுத்து வருவதற்கு முயற்சி செய்துள்ளனர். நேரு பல்கலைக்கழகம், டாடா சமூக அறிவியல் இன்ஸ்ட்டிடியூட் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications