Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தொழில்" போட்டி.. நடுகாட்டுக்குள் சடலம்.. சக திருநங்கையை கல்லாலேயே அடித்து கொன்று.. பயங்கரம்

சக திருநங்கையை கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலியல் தொழில் போட்டி காரணமாக திருநங்கையை கொலை செய்துள்ளார் சக திருநங்கை.. இந்த அதிர்ச்சி சம்பவம் புனேவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் ஹாவேலி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் மகர்த்வாஜ். இவரது தோழி காஜல்.. இவர் தேயூரை சேர்ந்தவர்கள்.

இவர்கள் 2 பேருமே திருநங்கைகள் ஆவர்.. 2 பேருமே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்... ஒன்றாகவே தொழிலை இவர்கள் ஆரம்பித்தாலும், மகர்த்வாஜ் வெகுசீக்கிரத்தில் பணம் சம்பாதிக்க துவங்கி உள்ளார்.. இவருக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் மிக குறுகிய காலத்திலேயே பெருகிவிட்டனர்..

ஆத்திரம்

ஆத்திரம்

இதுதான் காஜலுக்கு வருத்தத்தையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணி உள்ளது.. தனக்கும் வருமானம் பெருகும் என்று காத்து கொண்டிருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.. நாளடைவில் இதனால் காஜல் வெறுப்படைந்தார்.. இதற்கு பிறகுதான் சக தோழியான மகர்த்வாஜை கொன்றுவிடுவதாக முடிவு செய்து, இறுதியில் அவரை கொலையும் செய்துவிட்டார்.. இது தொடர்பாக மகர்த்வாஜ் குடும்பத்தினர் போலீசில் புகார் தரவும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு காஜலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..

 ஆண் - பெண்

ஆண் - பெண்

இந்த வழக்கு விசாரணையை யாவத் போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.. இதுகுறித்து எஸ்.ஐ. கேசவ்யாபிள் சொல்லும்போது, "அகமத்பூரின் லத்தூர் பகுதியை சேர்ந்தவர்தான் இறந்துபோன மகர்த்வாஜ், இத்தனை நாளும் அவர் திருநங்கை என்பதே பலருக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.. எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை.. காரணம், அச்சு அசல் ஆண் போலவே லத்தூரில் வலம் வந்துள்ளார்..

 திருநங்கை

திருநங்கை

அதேபோல தேயூரில் அச்சு அசல் ஒரு பெண் போலவே இயல்பாக நடமாடி வந்துள்ளார்.. அவர் இறந்ததும் உடனடியாக எங்களுக்கு தகவல் வரவில்லை.. காணவில்லை என்றுதான் புகார் வந்தது.. பிறகுதான் அவரை தேடி பார்த்தோம்.. இறுதியில், ஒரு காட்டுப்பகுதியில் அவரது சடலத்தை கண்டெடுத்தோம்.. உடனே அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தோம்.. அதில் பதிவாகி இருந்த சிலரை பிடித்து விசாரித்தோம்.. எங்கள் சந்தேகத்தின்பிடியில் கிட்டத்தட்ட 50 திருநங்கைகள் சிக்கினர்..

நெருக்கம்

நெருக்கம்

அவர்களை துருவி துருவி விசாரித்தபோதுதான் காஜலின் மீது சந்தேகம் அதிகமானது.. காஜல்தான் மகர்த்வாஜுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, காஜலின் உடம்பில் சில காயங்களும் இருந்தன.. அதனால் அவரை பிடித்து விசாரித்தபோதுதான், கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பெரிய பெரிய கல்லால் சக தோழியை தாக்கி இந்த கொலையை செய்தாராம்.. இப்போது 5 நாட்கள் போலீஸ் காவலில் உள்ளார்.. விசாரணையின் முடிவில் மேலும் சில தகவல்கள் வெளிவரும்" என்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+