மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதா? பேரழிவுதான்... காங். மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பேரழிவுதான் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளது.

மஜாராஷ்டிராவில் 105 இடங்களைப் பெற்ற தனிப் பெரும் கட்சி பாஜக. ஆகையால் அந்த கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருக்கிறார்.

Sanjay Nirupam Opposes to Power Sharing with Shivsena

ஆனால் பாஜக ஆட்சி அமைக்குமா? பெரும்பான்மையை நிரூபிக்குமா? என்பது சிவசேனாவின் கைகளில் இருக்கிறது. அதேநேரத்தில் சிவசேனாவோ, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மிலிந்த தியோரா, பாஜக-சிவசேனா ஆட்சி அமைக்காவிட்டால் 2-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சஞ்சய் நிருபம் தமது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா அரசியலில் தற்போதைய நிலையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முடியாது. எந்த ஒரு சூழ்நிலையயிலும் சிவசேனாவுடன் அதிகாரப் பகிர்வு குறித்து சிந்திக்கவும் கூடாது. அது கட்சிக்கு பேரழிவு ஏற்படுத்திவிடும் என தெரிவித்துள்ளார்.

சிவசேனாவுடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டணி வைக்கக் கூடாது என தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறார் சஞ்சய் நிருபம்.

English summary
Senior Congress leader Sanjay Nirupam has opposed to Congress- NCP power sharing with Shiv Sena
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X