இதுதான் பேட்டிங்கா? டேட்டாவை எடுத்து பாருங்க.. டென்ஷனாக்கிய தமிழக வீரர்.. குறி வைக்கும் தலைமை!
மும்பை: 2022 ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு வீரர் ஒருவர் ஆடும் விதம் கடுமையாக விமர்சனங்களை சந்தித்துள்ளது.
2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நேற்று குஜராத்திற்கு எதிராக வெற்றிபெற வேண்டிய போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் கடைசியில் சொதப்பியதால் குஜராத் வென்றது.
இந்த சீசன் முழுக்க தமிழ்நாடு வீரர்கள் பலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். முக்கியமாக நடராஜன் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வரை எடுத்து அசத்தி இருக்கிறார்.

குஜராத்
இன்னொரு பக்கம் அஸ்வின், ஷாருக்கான், முருகன் அஸ்வின் ஆகியோர் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். ஹைதராபாத் அணியில் இன்னொரு வீரரான வாஷிங்க்டன் சுந்தரும் நன்றாகவே பவுலிங் செய்து வருகிறார். இந்த சீசனில் டாப் வீரர் என்றால் அது தினேஷ் கார்த்திக்தான். பெங்களூர் அணியின் சூப்பர் ஸ்டாராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்து இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்
கடைசி கட்டத்தில் இறங்கி சிக்ஸ், பவுண்டரி அடித்து ஆட்டத்தை மாற்றும் வித்தையால் தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் மிகவும் டேஞ்சரஸ் வீரராக உருவெடுத்து இருக்கிறார். ஆனால் இந்த சீசனில் மிக மோசமான வீரர் என்றால் அது தமிழக வீரர் விஜய் சங்கர்தான். குஜராத் அணியில் இவர் ஆடி வருகிறார். இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் எனக்கு ஒன் டவுன் ஆட வேண்டும் என்று விருப்பம். அப்படி ஆடினால் அதிக ரன்கள் எடுப்பேன்.

திறமை
என்னால் திறமையை நிரூபிக்க முடியும் என்று விஜய் சங்கர் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தற்போது குஜராத் அணியில் அவரின் விருப்பப்படியே ஒன் டவுன் இறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் அவர் மோசமாக சொதப்பி வருகிறார். குஜராத் அணிக்காக அவர் ஆடிய 4 போட்டிகளில் மொத்தமாக 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

மோசம்
முதல் போட்டியில் 4, இரண்டாவது போட்டியில் 13, பின்னர் மூன்றாவது போட்டியில் 2, கடைசி போட்டியில் நேற்று சிஎஸ்கேவிற்கு எதிராக டக் என்று மொத்தமாக 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவர் முன்பு பவுலிங் செய்து வந்தார். இப்போது அதுவும் இல்லை. அவர் மொத்தமாக 1.3 ஓவர்கள் வீசி உள்ளார். இதில் 14 ரன்கள் அவர் கொடுத்துள்ளார். இந்த தொடரில் விஜய் சங்கர் ஸ்டிரைக் ரேட் வெறும் 54.28 மட்டுமே.

டேட்டா
2018 சீசனில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடினார். அதில் சராசரியாக 53 ரன்கள் எடுத்தவர், 143 ஸ்டிரைக் ரேட் வைத்து இருந்தார். ஆனால் அதன்பின் நடந்த 4 சீசன்களில் மொத்தமாக இவர் மொத்தமாக 500 ரன்கள் கூட எடுக்கவில்லை. 2020ல் 97 ரன்கள், 2021ல் 58 ரன்கள், 2022ல் 19 ரன்கள் எடுத்துள்ளார், வருடா வருடம் அவரின் பேட்டிங் மிக மோசமாகிக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
Recommended Video

நீக்கம்
குஜராத் அணியில் இன்னொரு வீரரான சாய் சுதர்சன் நன்றாக ஆடியும் அவருக்கு வாய்ப்பு இவரால் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இவருக்கு மேலும் வாய்ப்பு வழங்க கூடாது. மாறாக உண்மையாக திறமை கொண்ட வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத் அணி நிர்வாகமும், அதன் தலைமையில் இவரை அடுத்த போட்டியில் எடுக்க வாய்ப்பு குறைவு என்றும் தகவல்கள் வந்துள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications