Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே குரூப் தானா? 6 திருமணம் செய்து மோசடி! அதிகாலையில் எஸ்கேப்பான சந்தியா! இதான் இவங்களுக்கு வேலையே!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே, ஆறு திருமணம் செய்து பல நபர்களை ஏமாற்றியது ஏழாவது திருமணத்திற்கு தயாரான மணப்பெண் உள்பட 4 பேர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பரபர பின்னணி குறித்து பார்க்கலாம்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் இவருக்கும் மதுரை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி புது வெங்கரை அம்மன் ஆலயத்தில் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பெண் வீட்டாரராக பெண்ணோட அக்கா மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர். மேலும் மதுரை சார்ந்த பாலமுருகன் என்ற புரோக்கர். இவர்கள் மூவரும் மட்டுமே வந்திருந்து திருமணத்தை முடித்துவிட்டு திருமணத்தொகை கமிஷனாக ஒன்றரை லட்சம் வாங்கிக் கொண்டு சென்று விட்டனர்.

மாயமான மணமகள்

மாயமான மணமகள்

புது வாழ்க்கை தொடங்கிய தம்பதிகள் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். நீண்ட கனவுடன் சென்ற புது மாப்பிள்ளை தனபாலுக்கு ஒன்பதாம் தேதி காலை எழுந்து பார்த்தவுடன் தனது மனைவியை காணவில்லை என தேடி பார்த்தார். பல இடங்களில் தேசி எங்கும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தபோது புரோக்கர்கள் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களாக வந்த அனைவரும் செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

நகை பணத்துடன் எஸ்கேப்

நகை பணத்துடன் எஸ்கேப்

உடனடியாக பீரோவில் பார்த்தபோது கல்யாண பட்டு புடவை அந்த கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை என்பது தெரியவந்தது. அப்பொழுதுதான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடிய போது வேற ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது.

6 திருமணம்

6 திருமணம்

உடனடியாக உஷாரான நபர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் போல் மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி புரோக்கரிடம் பேசி உள்ளனர். மணமகனின் போட்டோ புரோக்கரிடம் கொடுத்துள்ளனர் அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர். நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து விடியற்காலை ஆறு மணிக்கு சந்தியா தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்துள்ளனர்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

அப்போது அங்கு வந்த சந்தியா வசமாக சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மூவரையும் தனபால் உறவினர்கள் பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மதுரை சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் நடந்துள்ளதாகவும் இது ஏழாவதாக திருமணம் நடக்க இருந்த போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு எஸ்கேப் ஆகி விடுவது வழக்கம். மதுரை சேர்ந்த புரோக்கர்கள் மூலம் இதுபோல் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது என்கின்றனர் போலீசார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+