நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2002ல் நடந்தது நினைவிருக்கா?.. கொரோனா பற்றி சீனா ஏன் மறைத்தது என்று தெரியும்.. அமெரிக்கா பாய்ச்சல்!

கொரோனா பரவல் குறித்து சீனா ஏன் உலக நாடுகளிடம் இருந்து உண்மையை மறைத்தது என்று தெரியும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா பரவல் குறித்து சீனா ஏன் உலக நாடுகளிடம் இருந்து உண்மையை மறைத்தது என்று தெரியும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனா மீது கடுமையான புகார்களை அவர் வைத்துள்ளார்.

Recommended Video

    சீனாவுக்கு எதிரான ஆதாரம் உள்ளது... அமெரிக்கா சொன்ன தகவல்

    கொரோனா காரணமாக உலகம் முழுக்க மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் 1,188,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 68598 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம், சீனா இது தொடர்பாக உண்மையை மறைத்துவிட்டது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து தற்போது துணை அதிபர் மைக் பாம்பியோ இதே குற்றச்சாட்டை வைத்து வருகிறார்.

    ஆம்புலன்ஸிலேயே காத்து இருந்தனர்.. கொரோனாவால் நிரம்பும் மருத்துவமனைகள்.. சென்னையில் மோசமாகும் நிலை! ஆம்புலன்ஸிலேயே காத்து இருந்தனர்.. கொரோனாவால் நிரம்பும் மருத்துவமனைகள்.. சென்னையில் மோசமாகும் நிலை!

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    துணை அதிபர் மைக் பாம்பியோ தனது பேட்டியில், சீனாவில் கொரோனா வைரஸ் எப்படி வெளியானது என்று அமெரிக்காவின் உளவுத்துறை விசாரித்து வருகிறது. எங்களிடம் இதற்காக நிறைய ஆதாரம் இருக்கிறது. சீனாவில் உள்ள சோதனை கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் வெளியாகி இருக்கும் என்பதற்கு எங்களிடம் நிறைய ஆதாரம் இருக்கிறது. இதை சீனா மறைத்து வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும்.

    மறைத்தது

    மறைத்தது

    சீனா இந்த வைரஸ் குறித்த உண்மையை மறைத்தது. அதன் தோற்றத்தை மறைத்தது. இதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம். அதேபோல் இந்த வைரஸ் மனிதரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதையும் நாங்கள் நம்புகிறோம். உலக வல்லுநர்கள் பலர் இதையே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்ன ஆதாரம் என்று நான் கூற மாட்டேன்.

    சீனாவின் வரலாறு

    சீனாவின் வரலாறு

    சீனா இதற்கு முன்பே இப்படி உலகிடம் பொய் சொல்லி இருக்கிறது. உலகிற்கு இதேபோல் சீனா வைரஸை பரப்பி உள்ளது. சீனாவில் இருக்கும் சோதனை கூடங்கள் சுத்தமாக இல்லை. அங்கு அடிக்கடி கசிவுகள் ஏற்படுகிறது. 2002ல் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் நினைவில் இருக்கும். 2002ல் சீனாவில்தான் சார்ஸ் நோய் உருவானது. ஆனால் அப்போதும் கூட சீனா உண்மைகளை உலகிடம் இருந்து மறைத்தது. சீனாவின் இந்த செயலை யாரும் மறைக்க வேண்டாம்.

    உலகம் முழுக்க

    உலகம் முழுக்க

    உலகம் முழுக்க கொரோனா பரவல் குறித்து சீனா மறைத்தது. உலக நாடுகள் அவதிப்படட்டும் என்று சீனா விட்டுவிட்டது. அதன் மூலம் தனது ஏற்றுமதியை தற்போது சீனா அதிகரித்து இருக்கிறது. உலகில் யாருக்கும் கொரோனா குறித்து தெரிய கூடாது என்பதில் சீனா மிகவும் கவனமாக இருந்தது. அமெரிக்க செய்தியாளர்களை சீனாவை விட்டு வெளியே அனுப்பியது. உலக சுகாதார மையத்தை உள்ளே அனுப்பாமல் தடுத்தது.

    உண்மை வெளியே வரும்

    உண்மை வெளியே வரும்

    எப்படி எல்லாம் உண்மையை மறைக்க முடியுமோ அப்படி எல்லாம் உண்மையை மறைத்தது. பெய்ஜிங் இதில் மோசமாக செயல்பட்டு இருக்கிறது.கொரோனா பற்றி சீனா ஏன் மறைத்தது என்று தெரியும். தங்கள் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று சீனா இப்படி செய்தது. இதற்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்று துணை அதிபர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: We have 'enormous evidence' that coronavirus began in lab in China says US today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X