கொர்.. கொர்.. குறட்டை தொல்லையா.. தப்பிக்க இந்த ஒரு வழியை மட்டும் யூஸ் பண்ணாதீங்க.. வார்னிங்!
நியூயார்க்: தூக்கத்தில் குறட்டை விடுவது சாதாரணமான ஒன்றுதான். இருந்தபோதிலும் இதனை பெருங்குறையாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சினிமாக்கள் சித்தரித்துள்ளன.
இதன் காரணமாக குறட்டையை தவிர்ப்பதற்கு பலர் மருத்துவர்களை நாடி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் வாயில் டேப் கொண்டு ஒட்டுவதன் மூலம் குறட்டையை தவிர்க்கலாம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் மருத்துவர்கள் இது குறித்து எச்சரித்துள்ளனர்.

மனிதன்
எந்த மனிதனும் 100 சதவிகிதம் முழுமையாக இருப்பதில்லை என்றும், உயிரினங்களில் முழுமை என்பதே கிடையாது எனவும் விஞ்ஞானிகள் அடிக்கடி கூறுவதுண்டு. ஏனெனில் நம்மை விட சிறந்தவர்கள் யாரேனும் இருந்தால்தானே அவர்களை பார்த்து "ஓ, இவர்கள்தான் சிறந்தவர்கள் போலும். எனவே நாமும் இது போல மாற வேண்டும்" என சிந்திக்க தோன்றும். துர்திஷ்டவசமாக இவ்வுலகில் அப்படி யாரும் கிடையாது ஏனெனில் உயிரினங்கள் நாங்தோறும் பரினாமம் அடைந்து வருகின்றன என ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

அதீத அழகுணர்வு
நிஜம் இவ்வாறு இருக்கையில், அன்றாடம் நாம் பார்க்கும் சினிமாக்கள், விளம்பரங்கள், வாசிக்கும் புத்தகங்களில் வரும் ஆண்/பெண் கதாபாத்திரங்கள் அதீத அழகுணர்ச்சியுடன் இருப்பதை போல சித்தரிக்கப்படும். இதனை பார்க்கும் மக்கள் தாங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் 'குறட்டை' பழக்கத்திலிருந்து பலர் வெளிவர வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த பழக்கம் அருகில் உறங்குபவர்களின் உறக்கத்தை பாதிக்கும் என்றாலும் சிலர் இதற்காக முறையான மருத்துவ வழிமுறைகளை பின்பற்றாமல் யூடியூப் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களை பார்த்து அதையே பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

வீடியோ
அந்த வகையில் குறட்டையை நிறுத்துவதற்கு வாயில் 'பிளாஸ்டிக் டேப்' போட்டு ஒட்டிக்கொள்ளுதல் எளிமையான தீர்வாக சில வீடியோக்கள் பரிந்துரைக்கின்றன. இந்த வீடியோக்களை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆனால் இது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மருத்துவர்கள் கூறியுள்ளதாவது, "உறக்கம் என்பது மனிதனுக்கு இன்றியமையாதது. அதேபோல உறக்கத்தின் போது சுவாசமும் உடலுக்கு இன்றியமையாதது. நாம் உறங்கும்போது மூக்கு வழியாக சில நேரங்களில் சுவாசம் தடைப்படும். அப்போது வாய் வழியாகவே உடல் தன்னிச்சையாக சுவாசத்தை மேற்கொள்ளும்.

உயிரிழப்பு
இவ்வாறு மேற்கொள்ளப்படும்போதுதான் குறட்டை சத்தம் கேட்கிறது. நாம் குறட்டையை கட்டுப்படுத்துகிறோம் என உடலின் தன்னிச்சையான இயக்கத்தை தடை செய்கிறோம். வீடியோக்களில் வருவதை போல டேப் போட்டு வாயை மூடிவிட்டால் ஆழ்ந்த உறக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மரணத்திற்கு கூட வழி வகுக்கலாம். எனவே இவற்றை தவிர்த்திடுங்கள்" என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மருத்துவ மருத்துவத்தின் இணை பேராசிரியரான டாக்டர் ராஜ் தாஸ்குப்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications