“ஏய் இது எங்க ஏரியா உள்ள வராத”.. இனிமே நாய் இப்டி கோபமா பேசினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல பாஸ்!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு அருமையாக பேச பயிற்சி கொடுத்திருக்கிறார்.
Recommended Video
நியூயார்க்: பெண் ஒருவர் தான் வளர்க்கு நாய்க்கு பேச பயிற்சி கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஐந்து அறிவு கொண்ட விலங்குகளுக்கு சில நேரம் ஆறறிவு கொண்ட மனிதர்களை மிஞ்சும் வகையில் சில விஷயங்களை செய்து அசத்திவிடுகின்றன. நாம் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, கிளி உள்ளிட்ட விலங்குகள் நம்மை அசர வைக்கும் வகையில் பல காரியங்களை செய்யும் வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு பேச பயிற்சி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிறிஸ்டினா ஹங்கர் என்ற பெண்மணி, கலிபோர்னிமா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரத்தில் வசித்து வருகிறார். அவர் ஒரு பேச்சியல் நிபுணர்.
கிறிஸ்டினா நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் பெயர் ஸ்டேல்லா. கிறிஸ்டினா ஒரு பேச்சியல் நிபுணர் என்பதால் ஸ்டேல்லாவுக்கு பேச்சு பயிற்சி கொடுத்து வருகிறார். இதற்காக கீபோர்ட் ஒன்றை அவர் பயன்படுத்துகிறார்.
அந்த கீபோர்டில் மொத்தம் 29 பொத்தான்கள் உள்ளன. ஒவ்வொரு பொத்தானிலும் ஒரு வார்த்தை உள்ளது. அதை அழுத்தும் போது அந்த வார்த்தை ஒலிக்கிறது. உதாரணத்துக்கு, 6ம் எண் பொத்தானை அழுத்தினால் லுக் என ஒலிக்கும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு வார்த்தை.
இந்த கீபோர்டை மிகவும் அருமையான பயன்படுத்துகிறது ஸ்டேல்லா. தனது முதலாளியிடம் அது சொல்ல நினைக்கும் விஷயங்களை, அந்த பொத்தானை அழுத்தி தெரியப்படுத்துகிறது.
View this post on InstagramA post shared by Christina Hunger, MA, CCC-SLP (@hunger4words) on
வைரலாகியுள்ள அந்த வீடியோவில், வெளியில் யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்துவதற்காக, லுக் எனும் பொத்தானை அழுத்துகிறது ஸ்டேல்லா. சில சமயம் இரண்டு, மூன்று பொத்தான்களை ஒருசேர அழுத்தி, ஒரு வாக்கியமாகவே பேசுகிறது.
இந்த புத்திசாலி நாய்க்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஸ்டெல்லாவின் வீடியோக்களை பார்ப்பதற்காகவே கிறிஸ்டினாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை சுமார் 5 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தான் நினைத்தை பேசும் நாயை பார்ப்பது அரிதிலும் அரிது தானே. ஒருவேளை ஸ்டேல்லாவுக்கு கிறிஸ்டினா மீது கோபம் வந்தால், எப்படி எல்லாம் திட்டுமோ. இராமநாராயணன் படம் பார்ப்பது மாதிரியே இருக்கும்ல.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications