Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெகஜ்ஜால நித்தியானந்தா! சிஷ்யை விஜயபிரியாவுக்கு ஐநாவுக்கான தூதர் புரமோஷன்! நியூயார்க்கில் கூத்து!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான போலி சாமியார் நித்தியானந்தா, தமது சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா என்பவருக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என பிரமோஷன் கொடுத்திருக்கிறார். அத்துடன் நியூயார்க்கில் நடைபெறும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும் சிறிய நாடுகளின் தலைவர்களையும் தூதர் விஜயபிரியாவை சந்திக்க வைத்துள்ளார் ஜெகஜ்ஜால நித்தியானந்தா.

ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஐநா சபை பொதுக்கூட்டம் உள்ளிட்ட சர்வதேச மாநாடுகள் நடைபெறும் தருணங்களில் அதனை ஒட்டி பல்வேறு கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஐநா சபை கூட்டம்

ஐநா சபை கூட்டம்

தற்போது நியூயார்க் ஐநா சபை கூட்டத்தில் பல்வேறு நாட்டு தலைவர்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் தலைவர்களை குறிவைத்து, இந்தியாவில் தேடப்படுகிற குற்றவாளியின் உருவத்தை கைகளில் பச்சை குத்தி, ருத்திராட்சை மற்றும் ஜடாமுடி தரித்த ஒரு பெண் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தையும் அந்த தலைவர்களுக்கு ஜடாமுடி பெண் வழங்கினார். மறக்காமல் அத்தனை தலைவர்களுடனும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார் அந்த பெண்.

நித்தியின் விஜயபிரியா

நித்தியின் விஜயபிரியா

சர்ச்சைக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் பெயர் விஜயபிரியா. நியூயார்க் நகரில் ஐநா கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களுடனான விஜயபிரியாவின் சந்திப்பு படங்களை அமர்க்களமாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார் போலி சாமியார் நித்தியானந்தா. அத்துடன் விஜயபிரியாவுக்கு நித்தியானந்தா கொடுத்திருக்கும் பட்டம் கைலாசாவின் ஐநாவுக்கான தூதராம்.

தேடப்படுகிற குற்றவாளி

தேடப்படுகிற குற்றவாளி

இந்தியாவில் ஆன்மீகம் என்ற பெயரில் சிறுவர், சிறுமிகள், நடிகைகளை சீடர்களாக்கி அவர்களை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்துக்காக தேடப்படுகிற போலி சாமியார் நித்தியானந்தா. இந்தியாவில் தேடப்படுகிற குற்றவாளியான நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அதகளப்படுத்தி வருகிறார் நித்தியானந்தா.

நித்தியின் கூத்து

நித்தியின் கூத்து

கடந்த சில மாதங்களுக்கு மரணப்படுக்கையில் கிடந்தார் நித்தியானந்தா. அதனால் அவரை பிழைக்க வைக்க இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவுக்கு வந்தாலும் சிறைவாசம் உறுதி என்பதால் நித்தியானந்தா இங்கே வரவில்லை. தற்போது உடநலம் தேறிய நித்தியானந்தா வழக்கம் போல ஆன்மீக சேட்டைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இதில் ஒன்றுதான் ஐநா தூதராக விஜயபிரியாவை நியமித்திருப்பது எனவும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+