நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டென ரூட் மாறிய சாட்டிலைட்.. அப்படியே நகர்ந்து "எங்கே" போகுது பாருங்க.. நாசா செய்த வேலை! பரபரப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமியை சுற்றி வரும் சாட்டிலைட் ஒன்று சட்டென வட்டப்பாதையில் இருந்து வெளியேறி வேறு திசையில் நகர தொடங்கி உள்ளது. அந்த சாட்டிலைட் இப்படி திடீரென ரூட் மாறுவதற்கு பின் நாசாவின் முக்கியமான திட்டம் ஒன்று உள்ளது.

நியூசிலாந்தில் இருந்து மஹியா தீபகற்பத்தில் இருந்து ராக்கெட் லேப் என்ற நிறுவனம் மூலம் கேப்ஸ்டோன் என்று செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த நிறுவனத்தின் சிறிய வகை ராக்கெட்டான எலக்ட்ரான் ராக்கெட் மூலம் இது விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

செம டேஸ்ட்.. பலா மரத்தில் 2 கால்களை வைத்து.. அப்படியே கெத்தாக பழத்தை பறித்த யானை! வியந்த கோத்தகிரிசெம டேஸ்ட்.. பலா மரத்தில் 2 கால்களை வைத்து.. அப்படியே கெத்தாக பழத்தை பறித்த யானை! வியந்த கோத்தகிரி

பூமியை சுற்றி மேல் வட்ட பாதையில் சுற்றி வந்த இந்த ராக்கெட் தற்போது வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கேப்ஸ்டோன்

கேப்ஸ்டோன்

சிறிய திரஸ்டர்கள் மூலம் அதன் பாதை மாற்றப்பட்டு, அப்படியே வட்ட பாதையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது. சரி இந்த சாட்டிலைட் எங்கே செல்கிறது என்பதுதான் இதில் விஷயமே. இந்த ராக்கெட் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவை நோக்கி செல்ல உள்ளது. நிலவின் வட்ட பாதைக்கு அடுத்த 4 மாதங்களில் இது சென்று சேரும்.

 சாட்டிலைட் ஆராய்ச்சி

சாட்டிலைட் ஆராய்ச்சி

இந்த சாட்டிலைட்டில் இருக்கும் மிக குறைவான எனர்ஜியை பயன்படுத்தி அது நிலவை நோக்கி செல்ல இருக்கிறது. இதை மொத்தம் இரண்டரை வருடம் கஷ்டப்பட்டு அந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. மெதுவாக நிலவை நோக்கி இந்த சாட்டிலைட் நகர தொடங்கி உள்ளது. நிலவை குறித்த முக்கியமான தகவலைகளை இந்த சாட்டிலைட் அனுப்பும். இது நிலவை சுற்றி வர போகிறது.

 ஏன்?

ஏன்?

நிலவை இது முட்டை வடிவில் சுற்றி வரும். அதாவது முட்டை போல.. ஒரு பக்கம் நிலவிற்கு அருகிலும், இன்னொரு பக்கம் நிலவில் இருந்து வெகு தொலைவிலும் காணப்படும். இந்த சாட்டிலைட்டை அனுப்ப உண்மையான காரணமே வேறு என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். Rocket Lab மற்றும் Advanced Space ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இந்த செயற்கைக்கோளை நிர்வகிக்கிறது. இவர்களுடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த செயற்கைகோள் பயணம் மற்றும் அதன் தகவல்கள் அனைத்தையும் நாசா ஆராய்ச்சி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாசா விரைவில் நிலவின் வட்ட பாதையில் ஸ்பேஸ் ஸ்டேஷனை அமைக்க உள்ளது. இதற்கு ஸ்பேஸ் ஸ்டேஷனை அனுப்புவது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த டேட்டாவை திரட்டவே இப்போது இந்த் கேப்ஸ்டோன் சாட்டிலைட்டை நிலவை நோக்கி அனுப்பி உள்ளனர்.

Recommended Video

    James Webb Telescope எடுத்த முதல் புகைப்படங்களை வெளியிட்ட NASA | Science
    நிலவு

    நிலவு

    பெரும்பாலும் கேப்ஸ்டோன் சாட்டிலைட் செல்லும் அதே பாதையில் வரும் காலத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனை நாசா அனுப்பி வைக்கும். அதற்கான தரவுகளை இப்போது கேப்ஸ்டோன் சாட்டிலைட் நாசாவிற்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் ஈர்ப்பு விசை, வானிலை மோஷன் ஆகியவற்றை பயன்படுத்தி கேப்ஸ்டோன் சாட்டிலைட் செல்லும். இடையே இடையே எஞ்சின் உதவியுடன் சில பாதை மாற்றங்கள் செய்யப்படும். நவம்பர் 13ம் தேதி இந்த கேப்ஸ்டோன் செயற்கைகோள் நிலவின் வட்டப்பாதையை அடையும்.

    English summary
    Why did Nasa and Rocket Lab release a satellite out of orbit and move towards moon? பூமியை சுற்றி வரும் சாட்டிலைட் ஒன்று சட்டென வட்டப்பாதையில் இருந்து வெளியேறி வேறு திசையில் நகர தொடங்கி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X