ஒரு “கரடி” பண்ற வேலையா இது.. நைட்ல என்ன இந்த பக்கம்? நீங்களே பாருங்க! குன்னூரில் “ஷாக்”
நீலகிரி: குன்னூர் அருகே உபதலை கிராமத்தில் கரடி ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் உள்ள மாவட்டங்களில் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கு வன விலங்குகள் நுழைவது வழக்கம்.
குறிப்பாக யானைகள், காட்டெருமைகள், கரடிகள் சிறுத்தைகள், நரிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கியதில் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அதிகம் ஏற்பட்டு உள்ளன.

கரடி அட்டகாசம்
இந்த நிலையில்தான் இதேபோன்ற ஒரு சம்பவம் நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்து அமைந்துள்ள உபதலை கிராமத்தில் அரங்கேறி இருக்கிறது. அப்பகுதியில் இள்ள குடியிருப்புகளில் அண்மை காலமாகவே கரடிகளின் அட்டகாசம் அதிகரித்த நிலையில் இருந்துள்ளது.

குடியிருப்புக்குள் கரடி
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி நள்ளிரவு கிராத்தில் உலா வருவதாக தகவல் பரவி வந்தது. இதற்கிடையே நேற்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அந்த கரடி, பொருட்களை சூறையாடி சென்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

பால் பாக்கெட்
இந்த நிலையில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் இரவு உலா வந்த அதே கரடி, ஒரு வீட்டின் நுழைவாயில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பால் வாகனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து குடிக்க முயற்சித்து இருக்கிறது. கரடியின் இந்த செயல் அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சி
இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் பெரும் பீதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம பகுதியில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications