நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரறிவாளன்.. ஊட்டியில் "டாப்-லெவல்" மீட்டிங்! குவிந்த சட்ட வல்லுனர்கள்.. ஸ்டாலின் கேட்ட அந்த கேள்வி!

Google Oneindia Tamil News

ஊட்டி: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை ஊட்டியில் நடத்தி உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

15 பேர் படுகொலை - தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு 15 பேர் படுகொலை - தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரம் 142-வது பிரிவைச் செயல்படுத்தி உள்ளது. 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் மூன்று நாட்களுக்கு முன் விடுதலை ஆனார்.

பேரறிவாளன்

பேரறிவாளன்

தமிழ்நாடு அரசு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதை அடுத்து ஆளுநரை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. அதோடு அவர் செய்த தவறை கண்டித்து, அவருக்கு உத்தரவை பிறப்பிக்காமல் உச்ச நீதிமன்றமே தாமாக முன் வந்து பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில்தான் மேலும் 6 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மற்ற 6

மற்ற 6

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 494ல், ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் கழக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும், என்று குறிப்பிட்டு இருந்தது. அதாவது பேரறிவாளன் மட்டுமின்றி மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாக திமுக வாக்குறுதி கொடுத்தது.

திமுக வாக்குறுதி

திமுக வாக்குறுதி

இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் இருந்தபடியே 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார். உயர் அதிகாரிங்கள், டாப் லெவல் சட்ட வல்லுனர்கள், சீனியர் வழக்கறிஞர்கள் இந்த சந்திப்பில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் ஸ்டாலினிடம்.. 6 பேரையும் விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை. அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம்.

 ஆளுநருக்கு கட்டாயம்

ஆளுநருக்கு கட்டாயம்

161 படி அனுப்பினால் ஆளுநர் அதை ஏற்க வேண்டும். ஏற்கனவே ஆளுநரை உச்ச நீதிமன்றம் இதில் விமர்சனம் செய்துள்ளதால் அவருக்கு இதில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் அப்படியே செய்யலாம் என்று கூறி உள்ளனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின்.. பேரறிவாளன் வழக்கு தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்துமா என்று கேட்டு இருக்கிறாராம். ஆம் பொருந்தும்.

தீர்மானம்

தீர்மானம்

ஆனால் இனி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அல்லது அவர்கள் வழக்கு தொடுத்து பேரறிவாளன் போல தங்களை விடுதலை செய்ய சொல்லலாம். இரண்டு வகையில் இந்த விடுதலையை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர். அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றுவதை பற்றி முதல்வர் ஸ்டாலின் மேலும் ஆலோசனை செய்து இருக்கிறாராம். மற்ற 6 பேரும் பேரறிவாளன் போன்றவர்கள் கிடையாது.

பேரறிவாளன்

பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு ஆதரவாக அவரிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே பேசி இருக்கிறார். முன்னாள் நீதிபதிகளும் இவருக்கு ஆதரவாக பேசி உள்ளனர். ஆனால் மற்ற 6 பேர் அப்படி கிடையாது. எனவே அவர்களை விடுதலை செய்வது சட்ட ரீதியாக நன்றாக இருக்குமா? அரசுக்கு சிக்கல் என்னென்னெ இருக்கும் என்று கேட்டு இருக்கிறாராம். சட்ட ரீதியாக எல்லாஆயுள் தண்டனை கைதிகளுக்கும் மாநில அரசு விடுதலை கொடுக்க முடியும்.

வழக்கு

வழக்கு

அது என்ன வழக்காக இருந்தாலும் சரி.. மற்றபடி எதிர்க்கட்சிகளின், காங்கிரசின் ரியாக்சனை நாம் கட்டுப்படுத்த முடியாது என்று ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் முதல்வர் ஸ்டாலின் விரைவில் இவர்களை விடுவிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி. அதனால் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவார்கள் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

English summary
Will DMK release the other 6 convicts like Perarivalan? CM Stalin held meeting. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை ஊட்டியில் நடத்தி உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X