பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடங்கியது அடுத்த அலை.. பிரான்ஸ் நாட்டில் உச்சத்தில் டெல்டா கொரோனா பரவல்.. குழப்பத்தில் பிரஞ்சு அரசு

Google Oneindia Tamil News

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தற்போது உலக நாடுகளில் பரவ தொடங்கிவிட்டது. அமெரிக்க தொடங்கி ஆஸ்திரேலியா வரை பல்வேறு நாடுகளிலும் டெல்டா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் தீவிரமாகப் பரவுவதாக எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, டெல்டா கொரோனா 100+ நாடுகளில் பரவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் களைகட்டிய விவசாயிகள் நாடாளுமன்றம்... பேச்சுவார்த்தை தயார்- வேளாண் அமைச்சர் டெல்லி ஜந்தர் மந்தரில் களைகட்டிய விவசாயிகள் நாடாளுமன்றம்... பேச்சுவார்த்தை தயார்- வேளாண் அமைச்சர்

பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

டெல்டா கொரோனாவால் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இப்போது டெல்டா கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது. பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 21,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹெல்த் பாஸ்போர்ட்

ஹெல்த் பாஸ்போர்ட்

இதனால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சர்ச்சைக்குரிய ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

4ஆம் அலை

4ஆம் அலை

இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா நெகடிவ் அல்லது தடுப்பூசி சான்றிதழ்களை அனைத்து இடங்களுக்கும் கையோடு எடுத்துச் செல்வது முடியாத காரியம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசிய பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறுகையில், "நாம் இப்போது கொரோனா 4ஆம் அலையில் இருக்கிறோம். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தாத போது, வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த இது மட்டுமே ஒரே வழி" எனக் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு அதிகரித்துள்ளது.

கொரோனாதடுப்பூசி

கொரோனாதடுப்பூசி

அங்கு கொரோனா வேக்சின் செலுத்த மறுப்பவர்களின் எண்ணிக்கை அங்குக் கணிசமாக அதிகரித்துள்ளது. வேக்சின் பணிகளை இது கடுமையாகப் பாதித்துள்ளது. இதுபோன்ற மக்களின் மனநிலையை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் பிரஞ்சு அரசு குழப்பத்தில் உள்ளது. பிரான்ஸ் மக்கள் தொகையில் இதுவரை 56% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 46% இரண்டு டோஸ் வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது.

English summary
France is in the throes of the fourth wave of infections. So France's govt rolled out a controversial vaccine passport system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X