3,000 கி.மீ பாதயாத்திரை.. அரசியல் கட்சி எப்போது? - அதிரடியாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்!
பாட்னா: 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கவிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பீகாரின் சம்பாரனில் இருந்து 3,000 கி.மீ பாதயாத்திரையை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் பாத யாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸில் சேரவில்லை
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வந்தார். 2024 மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது நிபந்தனைகளுக்கு காங்கிரஸில் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காங்கிரஸில் இணையப்போவதில்லை என அறிவித்தார்.

அரசியல் கட்சி
இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பிரசாந்த் கிஷோர், "உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது" எனப் பதிவிட்டார்.
இதனால், பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சித் தொடங்குவதாக பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குவதாக இன்னொரு ட்வீட்டையும் பி.கே பதிவிட்டதால் அங்கு கட்சி தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

3000 கி.மீ பாத யாத்திரை
இந்நிலையில் இன்று பீகாரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், "'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ தூர பாத பீகாரின் சம்பாரனில் இருந்து தொடங்குறேன். அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு நான் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன்." என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இப்போதைக்கு கட்சி இல்லை
"எனக்கு இப்போது கட்சியோ, மேடையோ இல்லை. பீகாருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் மட்டுமே என்னிடம் உள்ளது.
பீகாரில் தற்போதோ, சமீபமாகவோ எந்த தேர்தலும் வரப்போவதில்லை. அரசியல் கட்சி தொடங்குவது இப்போதைக்கு எனது திட்டத்தில் இல்லை." என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தாலும், அவரது பாத யாத்திரை, மக்கள் சந்திப்பு ஆகியவை அரசியல் கட்சி தொடங்க அச்சாரம் போடுவதாக அமைந்துள்ளன.
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications