பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மசூதி"யில் காவி கொடி.. என்னது பாஜகவா.. நம்ம பிரதமர் யார் தெரியுமா.. வரிந்து கட்டி வந்த குஷ்பு

மசூதியில் காவி கொடி ஏற்றியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மசூதியில் காவிக் கொடியை ஏற்றிய செயலுக்கு, பாஜகவின் குஷ்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ராமநவமி கொண்டாடப்பட்டது... ஆனால் சில வட மாநிலங்களில் மட்டும் இந்த நாளை வன்முறை நாளாக சிலர் மாற்றி விட்டனர்.

விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது..

 ராமநவமி ஊர்வலத்தில் கலவரம்..முஸ்லீம்களின் கடைகள், வீடுகள் இடிப்பு..பழிக்கு பழியா?விளக்கும் ஆட்சியர் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம்..முஸ்லீம்களின் கடைகள், வீடுகள் இடிப்பு..பழிக்கு பழியா?விளக்கும் ஆட்சியர்

 அசைவ உணவு

அசைவ உணவு

அதனை உண்ண சென்ற மற்ற மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பு மாணவர்கள் தடுத்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி சாப்பிட சென்றவர்களை கடுமையாக தாக்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்... இப்படி பல இடங்களிலும் மத ரீதியான மோதல் வெடித்து கிளம்பியது.. இந்துத்துவா அமைப்புகள் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

 காவி கொடி

காவி கொடி

அந்த வகையில் பீகார் மாநிலத்திலும் ஒரு அராஜகம் நடந்தது.. ஒரு மசூதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு காவி கொடியை ஏற்றி அட்டகாசம் செய்துவிட்டது.. முசாபர்பூர் என்ற இடத்தில் இந்துத்வா அமைப்பினர் ராமநவமியன்று கையில் காவிக் கொடியுடன் ஊர்வலமாக சென்றார்கள்.. முகம்மது பூர் என்ற பகுதியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, டாக் பங்களா மசூதிக்குள் ஒரு நபர் திடீரென காவிக் கொடியுடன் உள்ளே புகுந்துவிட்டார்.

மசூதியில் காவி கொடி

பின்னர் அங்குள்ள கோபுரத்தில் ஏறி காவி கொடியை கட்டினார்.. இதைப் பார்த்து அந்த கும்பல், அவரை தடுக்கவுமில்லை.. கண்டிக்கவுமில்லை.. மாறாக, கைகளை தட்டி சிரித்து வேடிக்கை பார்த்தது.. பாஜக கொடியேற்றியதை குதூகலமாக கொண்டாடியது.. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. காரசார விவாதங்களையும் எழுப்பி வருகிறது..

மசூதி

மசூதி

மற்றொரு பக்கம் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஆனாலும், இதுவரை ஒருத்தரும் கைதாகவில்லை. இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில் உள்ளதாவது:

 காவி கொடி

காவி கொடி

"இதுபோன்ற செயல்கள் கடுமையான கண்டனத்துக்குரியவை. குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்... ஆனால் நடந்த சம்பவத்தில் சிலர் பாஜகவை தேவையில்லாமல் உள்ளே இழுத்துவிடுகிறார்கள்.. இப்படிப்பட்ட காரியங்களை எல்லாம் பாஜக செய்யவே செய்யாது.. அதை ஆதரிக்கவும் செய்யாது.. காரணம், நம்முடைய பிரதமர் மோடி, சமத்துவம், வளர்ச்சி, மத நல்லிணக்கம் போன்றவற்றை ஆழமாக நம்ப கூடியவர்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
actress kushboo condmens hoisting saffron flat in Bihar mosque and tweeted about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X