பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக முதல்வர்கள் செய்யாததை நிதிஷ்குமார் செய்கிறார்.. அருண்ஜேட்லிக்கு சிலை!

Google Oneindia Tamil News

பாட்னா: மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பீகாரில் அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி அருண் ஜேட்லி மறைந்த நிலையில், அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனக்கும் அருண் ஜேட்லிக்குமான 21 ஆண்டு கால நட்பை பற்றி உருகினார். ஆண்டுதோறும் அருண்ஜேட்லியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் எனநிதிஷ் கூறியுள்ளார். பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்தக் கட்சியின் முதலமைச்சர்களே செய்யாத ஒரு காரியத்தை நிதிஷ் செய்ய முன்வந்துள்ளார்.

arun jaitley statue will be installed in bihar

அருண்ஜேட்லி அற்புதமான திறமைகளையும், ஆற்றல் பட செயல்படக்கூடிய தன்மையையும் பெற்றிருந்தார் என்றும், 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான அரசில் தானும் ஜேட்லியும் இணைந்து பணியாற்றியதை கண்ணீர்மல்க நினைவு கூர்ந்தார்.
மேலும், 2005-ம் ஆண்டு பீகார் மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளராக அவர் பணியாற்றியதை என்றென்றும் தன்னால் மறக்கமுடியாது எனவும், அவரின் சாதுர்யமான கூட்டணிநடவடிக்கையால் லாலுவின் ஆட்சியை பீகாரில் முடிவுக்கு கொண்டு வர முடிந்ததாகவும் நிதிஷ்குமார் பேசினார்.

கேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்கேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்

இந்தியா என்ற ஒற்றை நாட்டின் கீழ் சமஸ்தானங்களை எப்படி சர்தார் வல்லபாய் படேல் இணைத்தாரோ, அதேபோல் ஜி.எஸ்.டி.மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற ஒருமைப்பாட்டை கொண்டுவந்தவர் ஜேட்லி என புகழாரம் சூடினார் நிதிஷ்.

English summary
arun jaitley statue will be installed in bihar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X