பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: தொங்கு சட்டசபை- யாருக்கும் பெரும்பான்மை இல்லை:சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் ஜேடியூ - பாஜக அணிக்கு 116 இடங்களும் கிடைக்கும் என சி வோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

Recommended Video

    Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil

    பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த இறுதி கட்ட வாக்குப் பதிவை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    Bihar: CVoter -Times Now Exit poll predicts UPA -120, NDA -116

    சிவோட்டர் டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆர்ஜேடி-காங்.-இடதுசாரிகள் அணிக்கு 120 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு 36.30% வாக்குகள் கிடைக்குமாம்.

    ஜேடியூ-பாஜக அணிக்கு மொத்தம் 116 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்த அணி மொத்தம் 37.70% வாக்க்குகளைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 8.50% வாக்குகளைப் பெற்றாலும் 1 இடத்தில்தான் வெல்லும் என்கிறது இந்த எக்ஸிட் போல் முடிவு.

    பிற கட்சிகள் மொத்தம் 6 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்கிறது சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.

    சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.

    ஆர்ஜேடி கூட்டணி: ஆர்ஜேடி- 85; காங்., 25; இடதுசாரிகள் 10 - மொத்தம் 120

    தேசிய ஜனநாயக கூட்டணி: பாஜக 70; ஜேடியூ- 42; மஞ்சியின் அவாமி மோர்ச்சா- 2; விஐபி-2 - மொத்தம் 116

    சிராக் பாஸ்வானில் எல்ஜேபி - 1

    பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை. சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகளின் படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    According to the CVoter -Times Now Exit poll predicts UPA -120, NDA -116 in Bihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X