பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்... மருத்துவமனையில் பாஸ்வான்... கூட்டணி குறித்து மகன் சிராக் முடிவெடுக்க அதிகாரம்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவுகள் எடுக்கும் அனைத்தும் அதிகாரமும் மகன் சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் களம் இப்போதே அனல் பறந்து வருகிறது. பாஜக- ஜேடியூவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ்-ஆர்ஜேடி இறங்கியது. இந்த மெகா கூட்டணியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா திடீரென கழன்று கொண்டது.

ஜேடியூ-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா இணைந்தது. அதேநேரத்தில் காங்கிரஸ்- ஆர்ஜேடி அணியில் இடதுசாரிகள் இணைந்தன. தற்போது ஜேடியூ-பாஜக அணியில் மத்திய அமைச்சர் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பெரும் குடைச்சலாகவே இருந்து வருகிறது.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்...இன்று வெளியாகிறதா...எங்கு எப்படி பார்க்க வேண்டும்!!ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்...இன்று வெளியாகிறதா...எங்கு எப்படி பார்க்க வேண்டும்!!

 மாஞ்சியை அழைத்துவந்த நிதிஷ்

மாஞ்சியை அழைத்துவந்த நிதிஷ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி இடம் பெற்றிருந்தாலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறது அந்த கட்சி. இதனால்தான் லோக்ஜனசக்திக்கு போட்டியாக மற்றொரு தலித் தலைவரான மாஞ்சியை கூட்டணிக்கு இழுத்து வந்தார் நிதிஷ்குமார். இதில் மேலும் கடுப்படைந்த லோக் ஜனசக்தி, எந்த நிமிடத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகலாம் என கூறப்படுகிறது.

எல்ஜேபிக்கு குட்பை சொல்லும் ஜேடியூ

எல்ஜேபிக்கு குட்பை சொல்லும் ஜேடியூ

ஜேடியூ தலைவர்களும் கூட, லோக்ஜனசக்திக்கு குட்பை சொல்வதில் தயாராகவே இருக்கின்றனர். லோக்ஜனசக்தியைப் பொறுத்தவரையில் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகிறது; இதனால் மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான். பாஜகவை பொறுத்தவரையில் 75 வயதாகிவிட்டதால் அமைச்சரவையில் இடம் தருவதில்லை என்ற கொள்கையை கடைபிடிக்கிறது.

முடிவெடுக்க சிராக்குக்கு அதிகாரம்

முடிவெடுக்க சிராக்குக்கு அதிகாரம்

அத்துடன் லோக்ஜனசக்தியை நம்பித்தான் மத்தியில் பாஜக ஆட்சி செய்ய வேண்டிய தேவையும் இல்லை. இதனால்தான் அந்த கட்சி, கூட்டணியில் வெளியேறினால் வெளியேறட்டும் என்ற நிலையில் பாஜகவும் இல்லை. இதனிடையே மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தொடர்ச்சியாக ட்விட்டரில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். கட்சி, கூட்டணிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் மகன் சிராக் பாஸ்வான்தான் மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

பாஸ்வானுக்கு என்ன பிரச்சனை?

பாஸ்வானுக்கு என்ன பிரச்சனை?

ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னரே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாம். ஆனால் வழக்கமான அமைச்சரவை பணிகள் பாதிக்கும் என்பதால் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்கின்றன லோக்ஜனசக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Union Minister Ram Vilas Paswan said that his son Chirag will take a final call on the LJP's alliance for the Bihar Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X