பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு... ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியை திடீரென உதறிய நிதிஷ்குமார்... புதிய தலைவர் தேர்வு!

Google Oneindia Tamil News

பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகி உள்ளார். நிதிஷ்குமாருக்கு நெருக்கமான, கட்சியின் பொது செயலாளராக இருந்த ஆர்.சி..பி சிங் புதிய தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

கடந்த 2019-ல் நிதிஷ்குமார் ஜேடியு தலைவராக 3 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் ஆர்.சி.பி சிங்குக்காக இந்த பதவியில் இருந்து விலகி உள்ளார்.

RCP Singh becomes new JD(U) president

பிகாரில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றி பாஜகவுக்கு 74 இடங்கள் கிடைத்தது அக்கட்சிக்கு கடும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் ஜேடியுவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 43 இடங்களில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலை விட அந்த கட்சி பல இடங்களில் தோல்வியை தழுவியது.

கொரோனா தடுப்பு மருந்தில் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் உலக நாடுகள் - காரணம் என்ன?கொரோனா தடுப்பு மருந்தில் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் உலக நாடுகள் - காரணம் என்ன?

கூட்டணி கட்சியினர் ஏற்கனவே ஒப்பு கொண்டபடி நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஜேடியு கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஜேடியு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். மாநிலங்களவை எம்.பி.யும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்த ராமச்சந்திரா பிரசாத் சிங் (ஆர்.சி.பி சிங்) புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். ஜேடியு புதிய தலைவராக தேர்வு செய்யபப்ட்டுள்ள ஆர்.சி.பி சிங் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி சிங் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு நிதிஷ்குமார் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது அவருடன் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். 2005-ல் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றபோது ஆர்.சி.பி சிங் முதன்மை செயலாளரானார். கடந்த 2019-ல் நிதிஷ்குமார் ஜேடியு தலைவராக 3 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் ஆர்.சி.பி சிங்குக்காக இந்த பதவியில் இருந்து விலகியுளளது குறிப்பிடத்தக்கது.

English summary
Bihar Chief Minister Nitish Kumar has abruptly resigned as the leader of the United Janata Dal (JDU). RPC Singh, who was the general secretary of the party close to Nitish Kumar, has been elected as the new leader
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X