அவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்.. மகா பாவிகள்! - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொதிப்பு
பாட்னா: தேசந்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கையை மீறி மது அருந்துபவர்கள் இந்தியர்களே இல்லை என்றும், அத்தகையவர்கள் மிகப்பெரும் பாவிகள் எனவும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார், கடந்த முறை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்தினார்.
இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் குடிமகன்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தடையின்றி நடைபெறும் கள்ளச்சார வியாபாரம்
பீகாரில் அரசு மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சார விற்பனை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி பீகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 12 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓராண்டில் கள்ளச் சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு கள்ளச் சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகள் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்கு தவறான முறையில் அறிமுகம் செய்ததாலேயே அங்கு கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.

மது அருந்தி கைதானவர்களை விடுவிக்க கோரிக்கை
இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை கவுன்சில் கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.சி. சுனில் சிங், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற்று அவர்களை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மது அருந்துபவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "மது அருந்துபவர்களை மகா பாவிகள் என்று நான் அழைப்பேன். மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையை கடைபிடிக்காதவர்கள் இந்தியர்களே இல்லை. அவர்கள் எந்த திறமையும் இல்லாதவர்கள். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்கள் குடும்பத்தினருக்கு அரசு எந்த நிவாரணமோ இழப்பீடோ வழங்காது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளோம்." என்றார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications