Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சமீப நாட்களாக பெங்களூர், சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் 'ஸோம்பி' போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பான வீடியோக்கள் ஷேராகி இருந்தன. இந்நிலையில், தற்போது பீகாரிலும் இந்த வகை போதை பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிஹாரில், பரபரப்பான சாலையில் சுயநினைவின்றி தள்ளாடிய ஒருவரால் ஸோம்பி போதைப்பொருள் பரவல் குறித்த புதிய அச்சம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Zombie Drug

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்த நபர் தன் சுயநினைவை இழந்திருந்ததாக தெரிவித்தனர். ஆணி அடித்ததை போல ஒரே இடத்தில், ஆனால் தடுமாறியவாது இளைஞர் நின்றிருந்தது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

'ஸோம்பி போதைப்பொருள்'

'ஸோம்பி போதைப்பொருள்' என்பது மூளை, உடலை கடுமையாக பாதிக்கும் செயற்கை போதைப்பொருளாகும். இது மாயத்தோற்றங்கள், திடீர் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும். இத்தகைய போதைப்பொருட்கள் ஒருவரின் இயல்பு நிலையை பாதித்து, விபத்துகளுக்கு வழிவகுக்கும். இப்படியான போதை பொருட்களை பயன்படுத்துபவர்களால், மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.

இதற்கு முன்னர், பெங்களூர், சண்டிகர், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போதைப்பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருந்ததை போன்ற வீடியோக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது பீகாரிலும் இந்த போதைப்பொருள் பரவியிருப்பதை சமீபத்திய வீடியோக்கள் உறுதி செய்திருக்கின்றன.

ஸோம்பி போதைப்பொருளால் இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து, காவல்துறையும் சுகாதார அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு, அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். போதைப்பொருள் எங்கிருந்து வந்தது எனக் கண்டறிய தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு குறித்து உரிய நேரத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இத்தகைய போதைப்பொருட்கள் பரவுவதைத் தடுக்க ஆரம்பகால விழிப்புணர்வே முக்கியம் என வல்லுநர்கள் கூறினர்.

இந்த மருந்துகள் ஒருவரின் சிந்தனை மற்றும் நடத்தையை விரைவாகப் பாதித்து, சில சமயங்களில் வன்முறை அல்லது தன்னைப் புண்படுத்தும் செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+