புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3ஆம் அலையை தடுக்க ஒரே வழி.. சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் வேக்சின்..ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: வரும் சுதந்திர தினத்துக்குள் புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் உச்சத்திலிருந்தது. அதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது,

3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்

ஊரடங்கிற்குப் பின்னரே, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இது அம்மாநில மக்களுக்குச் சற்றே நிம்மதி அளித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் புதுச்சேரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் புதுவையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்திலுள்ள ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி மூலம் இந்தக் கூட்டத்தைத் தலைமை தாங்கினார். இதில் புதுவை தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறைச் செயலர் அசோக் குமார் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் எப்படி விரைவாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் முன்களப் பணியாளர்களும் எனது பாராட்டுகள்..!

10 கிராமங்களில் 100% தடுப்பூசி பணிகள்

10 கிராமங்களில் 100% தடுப்பூசி பணிகள்

நமது புதுச்சேரியில் 6 கிராமங்களிலும் காரைக்கால் மாவட்டத்தில் 4 கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதமும் எழுதியுள்ளேன். ஆனால் இத்துடன் நாம் நின்றுவிடக் கூடாது. இந்த சாதனையை அனைத்து பகுதிகளுக்கும் நாம் விரிவுபடுத்த வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான உள்ள ஒரே ஆயுதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி

சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி

புதுச்சேரியுள்ள அனைத்து மக்களுக்கும் வரும் சுதந்திர தினத்திற்குள் நாம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொண்டால் மட்டுமே கொரோனா 3ஆம் அலை ஏற்படுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை நாம் மக்களிடையே அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.

ஊக்குவிக்கும் திட்டம்

ஊக்குவிக்கும் திட்டம்

முதலில் புதுச்சேரியிலுள்ள முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகைகளை அறிவிக்கலாம். இது தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைக் கண்டிப்பாக உயர்த்தும். அனைவரும் ஒருசேர முயன்றால் சுதந்திர தினத்திற்குள் நிச்சயம் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த முடியும்" என்றார்.

English summary
Puducherry governor Tamilisai Soundararajan says all people need to be vaccinated before independence day. She also adds 6 villages in Puducherry and 4 in Karaikal already achieved 100% vaccination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X