Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த லிஸ்ட்ல வெச்சிருக்காங்கன்னு தெரியல.. செஸ் ஒலிம்பியாட்டுக்கு அழைக்கல - சிரித்தபடி சொன்ன தமிழிசை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.

 செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

பிரதமர் மோடிக்கு அழைப்பு

இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 28 ஆம் தேதி சென்னை வர உள்ளார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் லட்சினையான "தம்பி" என பெயரிடப்பட்டு உள்ள குதிரை சிலையை வழங்கினர்.

தமிழிசை பேட்டி

தமிழிசை பேட்டி

இதேபோல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "செஸ் ஒலிம்பியாட் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஒன்று. இது உலகம் எங்கும் தமிழ் கலாச்சாரத்தை கொண்டு சேர்க்கும் முயற்சி.

Recommended Video

    Chess Olympiad முழுமையான மருத்துவ பரிசோதனைகளுடன் நடைபெறும் | Minister மா.சுப்ரமணியன் விளக்கம்
    என்னை அழைக்கவில்லை

    என்னை அழைக்கவில்லை

    பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைப்பது பெரும் மகிழ்ச்சி. இன்னும் மாணவர்கள் விளையாட்டில் பங்குபெற வேண்டும். அதுவும் குறிப்பாக செஸ் மூளைக்கு கொடுப்பது. இதற்கு எனது வாழ்த்துக்கள். அழைப்பை அனைவருக்கும் கொடுக்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. எந்த லிஸ்டில் என்னை வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில், இந்தியாவில் எது நடந்தாலும் எனக்கு பெருமை." என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+