புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முற்றும் மின் ஊழியர் போராட்டம்! முழுவதுமாக இருளில் மூழ்கிய புதுச்சேரி! போராட்டத்தில் குதித்த மக்கள்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று 3வது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் துறை ஊழியர்கள் இன்று நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று 3வது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

 இனி 5 இல்ல 4 தான்.. எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் மூவ்.. 'அஸ்திவாரமே’ - ஆடிப்போன ஓபிஎஸ் டீம்! இனி 5 இல்ல 4 தான்.. எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் மூவ்.. 'அஸ்திவாரமே’ - ஆடிப்போன ஓபிஎஸ் டீம்!

 புதுச்சேரி விவகாரம்

புதுச்சேரி விவகாரம்


புதுச்சேரி மாவட்டம் அம்பகரத்தூர், தேனூர், தென்னலக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் இருளில் மூழ்கியதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரைகால் - திருவாரூர் நெடுஞ்சாலையில் அம்பகரத்தூர் என்ற இடத்தில் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் ஊழியர்கள் போராட்டம்

மின் ஊழியர்கள் போராட்டம்

இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் காரணமாக நகர மற்றும் கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் மின் தடை

திடீர் மின் தடை

இந்நிலையில் இன்று காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மின்தடை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக பேருந்துகள் நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

மின்சாரம் வந்தால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் என அறிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதே போல் கோரிமோடு பகுதிகளிலும் மின்தடை காரணமாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Due to the power outage in various parts of Puducherry, an unusual situation has arisen in Puducherry as people have been participating in protests including road blockades for the 3rd day today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X