புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்.. நகராட்சி அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்சன்
புதுச்சேரி: புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடத்தியவர்களை போலிஸார் கைது செய்துள்ள நிலையில், மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்த கட்டிடங்களுக்கு புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Recommended Video
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் விபசாரம் நடந்து வந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த வாரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் நகர பகுதியில் மூன்று மசாஜ் செண்டர்களில் விபசாரம் நடத்தி வந்த உரிமையாளர்கள் 5 பேர் வாடிக்கையாளர்கள் 4 பேர் என 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி நகராட்சி
அதே போல் விபச்சாரத்தில் ஈடுப்படுத்தப்பட்ட 10 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட அழகு நிலையம் மற்றும் மசாஜ் செண்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காவல்துறை சார்பில் புதுச்சேரி நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதிகாரிகள் தகவல்
இதனை தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வருவாய் அதிகாரி சாம்பசிவம் மற்றும் ஊழியர்கள் மறைமலைஅடிகள் சாலை, அண்ணாநகரில் விபசாரம் நடைபெற்ற மசாஜ் செண்டர்களை புதுச்சேரி நகராட்சியின் வணிக உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி செயல்பட்டதாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்ட கட்டிடங்களில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர், மேலும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குற்றம்
நர்சிங் கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 17 வயதான நர்சிங் கல்லூரி மாணவி. இவர் சோழத்தரம் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

காவல்நிலையம்
அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜி என்பவர் மகன் ரஞ்சித்குமார் என்பவர் இவரிடம் உறவினர் என்று கூறிக்கொண்டு அடிக்கடி பேசியுள்ளார். இதை தவறாக கருதிய ரஞ்சித்குமார் அவரிடம் மூன்று ஆண்டுகளாக விடாப்பிடியாக பேசி ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ கைது
புகாரின் அடிப்படையில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில் 17 வயது சிறுமியை ரஞ்சித்குமார் அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றதை தொடர்ந்து காவல்துறையினர் ரஞ்சித் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications