அரசு உயர் அதிகாரி மீது பாலியல் புகார்.. ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்.. என்ன நடந்தது?
புதுச்சேரி: புதுச்சேரி கால்நடைத்துறையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெறும் நாளில் கால்நடைத்துறையின் இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
புதுச்சேரியில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க, உள்ளூர் புகார்கள் குழு என்ற தனிப் பிரிவு, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது..
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அந்தப் பிரிவின் தலைவராக, முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவி டாக்டர் வித்யா ராம்குமார் நியமிக்கப்பட்டார்..

பெண்கள் புகார்
அந்தப் பிரிவு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள், உயரதிகாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைப் புகார்களாக அளித்தனர்.. அதில், புதுச்சேரி கால்நடைத்துறையின் இணை இயக்குநராகவும், இயக்குநராக கூடுதல் பொறுப்பையும் வகித்த பத்மநாபனின் பாலியல் தொல்லைகள் தாங்க முடியவில்லை என்று அங்கு பணிபுரியும் பெண்கள் எழுத்துபூர்வமாக அளித்தனர்..

உயர்நீதிமன்றம்
அதனடிப்படையில், இந்தப் புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பத்மநாபனுக்குக் கடிதம் அனுப்பியது அந்தக் குழு.. ஆனால் அங்கு ஆஜராகாத அவர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தன்னை விசாரிப்பதற்குத் தடை ஆணையை பெற்றார்..

விசாரணை
இதற்கிடையில், இயக்குநர் பத்மநாபன் தனது துறையில் பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோக்கள் வெளியான அதையடுத்து, டாக்டர் பத்மநாபனை கால்நடைத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விடுவிப்பதாகவும், உடனே அவர்மீது வழக்குப் பதிவு செய்து எஸ்..பி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போதைய கவர்னர் கிரண் பேடி உத்தரவிட்டார்.. அதனடிப்படையில் அரசு நிறுவனமான பான்கேர்' துறையின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.. தொடர்ந்து, தனது மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை பத்மநாபன் அணுகினார் ..

அவசர வழக்கு
இந்நிலையில் பத்மநாபன் செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.. அவரது மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.. அதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் காணொலி மூலம் இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது..

அதிகாரிகள் கலக்கம்
வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சரவணன், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்மநாபனை சஸ்பெண்ட் செய்யும்படி புதுச்சேரி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.. அதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நாளிலேயே பத்மநாபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. இது அரசு உயரதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications