Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது இது? பாம்பா? எங்க கொடுங்க.. அப்படியே லாவகமாக வாங்கிய தமிழிசை.. சிங்கப்பெண்ணே! - வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கையில் பாம்பை பிடித்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

    பாம்பை கையில் பிடித்து விளையாட்டு: பறவைகளை கொஞ்சி... சிறு பிள்ளையாய் மாறிய தமிழிசை!

    புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவ்வப்போது பல்வேறு துறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் தெலுங்கானா செல்லாமல் இருந்தார்.

    தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசைக்கு, அம்மாநில தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

    தெலுங்கானா

    தெலுங்கானா

    ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி பட்ஜெட் கூட்டதொடரில் ஆளுநர் உரை இடம்பெறவில்லை, ஆளுநர் செல்லும் இடங்களில் அவரை வரவேற்க ஆட்கள் யாரும் வரவில்லை, உகாதி விருந்துக்கு யாரும் வரவில்லை என்று தெலுங்கானாவிலும் கேசிஆர் - தமிழிசை இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனால் தெலுங்கானா செல்லாமல் இருந்தவர் கடந்த வாரம்தான் தெலுங்கானா சென்றார்.

    புதுச்சேரி விசிட்

    புதுச்சேரி விசிட்

    அங்கு ஒரு வாரம் தங்கி இருந்தவர் தற்போது புதுச்சேரிக்கு வந்துள்ளார். அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்று ஆய்வு கொண்டார். அப்போது அங்கு இருந்த சிறுவர்கள் ரயிலில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு பயணித்தார். மேலும் ரயிலில் பயணம் செய்த குழந்தைகளுடன் அமர்ந்தும் குழந்தைகளை மடியில் தூக்கி வைத்துகொண்டு கொஞ்சியபடி ரயில் பயணம் செய்தார். இது அங்கு வந்த பொதுமக்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    துணை நிலை ஆளுநர்

    துணை நிலை ஆளுநர்

    துணை நிலை ஆளுநர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் பார்க்கிற்கு வந்ததும் குழந்தை போல நடந்து கொண்டார். இதேபோல் புதுச்சேரி வனத்துறைக்கு சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டு அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் தனது கையால் தூக்கி வைத்துக்கொண்டு அதனுடன் கொஞ்சி விளையாடியது வியப்பை ஏற்படுத்தியது.

    ராட்சச பாம்பு

    ராட்சச பாம்பு

    அதிலும் ராட்சச பாம்பு ஒன்றை பார்த்தவர்.. அது என்ன பாம்பு என்று கேட்டு.. அதை கையில் அசால்ட்டாக தூக்கி பார்த்தார். அது பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்பதால் விஷம் இருக்காது. இருந்தாலும் துணிச்சலாக அந்த பாம்பை தமிழிசை கையாண்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறுவர்களுடன் ரயில் பயணம் செய்து குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சியும், வனத்துறைக்கு சென்றபோது மயில்களை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சியது தன்னுடைய எளிமையை காட்டுவதாக இருந்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+