புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கப்பெண்ணே..ஒரு ஊருக்கே கழிப்பறை! மகாராஷ்டிர பாடப்புத்தக்கத்தில் இடம்பிடித்த நம்ம ஊர் ஜெயலட்சுமி!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கு செல்ல உதவ முன்வந்த தொண்டு நிறுவனத்திடம் தனது ஊருக்கே கழிப்பறை கட்டி தர கோரிக்கை வைத்த புதுக்கோட்டை மாணவி குறித்த பாடம் மகாராஷ்டிரா மாநில பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

    Pudhukottai மாணவியின் சமூக அக்கறை, Maharashtra புத்தகத்தில் பாடம் *Tamilnadu | Oneindia Tamil

    சாதனைகள் செய்ய வயதோ, பாலினமும், திறமையோ எதுவுமே தேவையில்லை. நல்ல சிந்தனையும் திட்டமிட்ட செயல்பாடுகளும் இருந்தால் போதும்.

    தாஜ் மஹால் கோயில் நிலத்திலும் இல்லை.. அங்கு கடவுளும் இல்லை.. ஆர்டிஐ கேள்விக்கு தொல்லியல் துறை பதில்!தாஜ் மஹால் கோயில் நிலத்திலும் இல்லை.. அங்கு கடவுளும் இல்லை.. ஆர்டிஐ கேள்விக்கு தொல்லியல் துறை பதில்!

    பெண்களை வெறுமனே சிங்கப்பெண்களே என்று தூக்கிக் கொண்டாடினால் மட்டும் போதாது அவர்களுக்கான வாய்ப்பையும் நாம் உருவாக்கி தர வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நாம் அதை கொண்டாடவும் வேண்டும்.

    புதுக்கோட்டை மாணவி

    புதுக்கோட்டை மாணவி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு சிறுமி தற்போது பல மாநிலங்கள் கடந்து மொழிகள் கடந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அதுவும் மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் இருந்து யார் அவர் விரிவாக பார்க்கலாம். புதுக்கோட்டை மாவட்டம் ஆதனங்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.

    நாசா செல்ல வாய்ப்பு

    நாசா செல்ல வாய்ப்பு

    தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் இவர்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவர். வறுமையில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியான ஜெயலட்சுமி கடந்த 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தா.ர் அப்போது போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அவருக்கு உலகின் மிகவும் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

    ஊருக்கே கழிப்பறை

    ஊருக்கே கழிப்பறை

    ஆனால் அதற்கான தொகை அவரிடம் இல்லை. சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி தேவைப்பட்ட நிலையில் புதுக்கோட்டையைச் சார்ந்த பல்வேறு பொதுமக்களும் சமூக ஆர்வலரும் நிதியை வாரி வழங்கினர். தேவைக்கு அதிகமாகவே நிதி சேர்ந்த நிலையில் திருச்சியில் உள்ள கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் சிறுமியை அணுகி உதவ முன் வந்தனர். ஆனால் தனக்கு பணம் சேர்ந்து விட்டது எனவும் என கூறினார் வேறு ஏதாவது உதவி கேளுங்கள் என அந்த தொண்டு நிறுவனத்தினர் கூறிய நிலையில் தனக்கென எதுவும் வேண்டாம் தனது கிராமத்து மக்களுக்கு கழிப்பறை கட்டித் தாருங்கள் எனக்கு கோரிக்கை விடுத்தார்.

    தொண்டு நிறுவனம் உதவி

    தொண்டு நிறுவனம் உதவி

    மாணவியின் கோரிக்கையை எடுத்து முந்திரி காய்களை வாங்கி வந்து சாலையோரம் விற்பனை செய்யும் திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு அந்த தொண்டு நிறுவனத்தின் ஒரு கழிப்பறைக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவில் சுமார் 126 கழிப்பறைகளை ஒன்றரை ஆண்டுகளில் கட்டிக் கொடுத்தனர் குறைந்த செலவில் பல ஆண்டுகளுக்கு பயன் தரும் வகையில் இந்த கழிவறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஜெயலட்சுமிக்கு நன்றி கூறினர்.

    மாணவி குறித்த பாடம்

    மாணவி குறித்த பாடம்

    இதை தொடர்ந்து சிறுமிக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ் பாடப் புத்தகத்தில் ஜெயலட்சுமி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. சிவா என்பவர் எழுதியுள்ள மகாராஷ்டிரா ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கனவு மெய்ப்படும் என்ற தலைப்பில் நான்கு பக்கத்திற்கு ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. சமூக சேவை மூலம் பலரின் மனதில் இடம் பிடித்த சிறுமி ஜெயலட்சுமி தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    English summary
    A lesson about a Pudukottai student who requested a charity to build a toilet in her village to help her go to NASA, the American space exploration center, has been included in the Maharashtra state curriculum.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X