டூ வீலரில் ஓட்டுப்போட வந்த அமைச்சர் ரகுபதி! வரும் வழியில் மக்களுக்கு வணக்கம் போட ஒரு வாய்ப்பு!
புதுக்கோட்டை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை செலுத்துவதற்காக டூ வீலரில் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றிருக்கிறார்.
Recommended Video
காலை 7.30 மணிக்கே வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று ஓட்டளித்த அமைச்சர் ரகுபதி, அதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு எவ்வாறு நடக்கிறது என்பதை கட்சியினரிடம் அறிவதற்காக ஒரு ரவுண்ட் அடிக்க புறப்பட்டுவிட்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, அதிமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டதால் இப்போதே குற்றஞ்சாட்ட தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப்போடச் சென்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வழக்கமாக தாம் பயணிக்கும் அரசு காரை தவிர்த்துவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அவ்வாறு அவர் செல்லும் போது வழியில் அவரை அடையாளம் கண்டு வணக்கம் வைத்த பொதுமக்களுக்கு இவரும் பதில் வணக்கம் வைத்து புன்னகைத்துள்ளார். பாதுகாப்பு அதிகாரிகளோ, கட்சியினரோ தன்னை பின் தொடர வேண்டாம் எனக் கூறிவிட்டு எளிமையாக அமைச்சர் சென்றது புதுக்கோட்டை மக்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

27-வது வார்டு
அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை 27-வது வார்டில் வாக்களித்ததோடு மாவட்டத்தின் மற்ற இடங்களிலும் வாக்குப்பதிவு எவ்வாறு நடக்கிறது என்பதை நேரில் அறிவதற்காக விசிட் அடிக்க தொடங்கிவிட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது என்றும் அதனால் தான் இப்போதே குறை சொல்லத் தொடங்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக கூறினார்.

திமுக வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறுவது உறுதி என்றும் எந்த இடத்திலும் தேர்தல் குளறுபடிகள் நிகழாத போது அதிமுகவினர் வேண்டுமென்றே பிரச்சனைகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் போது ஒரு பகுதியில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் ஆனால் உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை ஒரு பகுதியில் திரும்ப திரும்ப பல முறை பிரச்சாரம் செய்கிற வாய்ப்பு வேட்பாளர்களுக்கு கிடைப்பதாக சுட்டிக்காட்டினார்.

நகர்மன்றத் தலைவர்
புதுக்கோட்டை நகர்மன்ற வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் அமைச்சர் ரகுபதியின் ஆதரவாளர்கள் என்பதும் அவரால் சீட் கிடைக்கப்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவியை பிடிக்கும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications