தொடரும் இலங்கையின் அத்துமீறல்.. வேலைநிறுத்தத்தில் மீனவர்கள்.. கடலுக்கு செல்லாமல் 1,300 படகுகள்!
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களின் படகுகளை அடித்து சேதப்படுத்துவதுடன், வலைகளை அறுப்பதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இருந்தும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் கைது
இதனிடையே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 27ம் தேதி சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

மீனவர்கள் போராட்டம்
அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும் முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவ சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்க வலியுறுத்தல்
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2018 ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

1,300 படகுகள்
இந்த போராட்டம் காரணமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 800க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications